யார் சைவம்
இந்த பூமியில், தனது மரபணுவில் மைட்டோகாண்ட்ரியாவைக் கொண்ட எந்த ஒரு உயிரினமும், தான் சுத்த சைவம் என்று மார்தட்டிக் கொள்ள முடியாது. மரபணுவில் சைட்டோப்ளாசத்தைக் கொண்ட தாவரங்கள் மட்டுமே, சூரிய ஒளியின் உதவியால் தனக்குத் தேவையான உணவைத் தாங்களே உற்பத்தி செய்துகொள்ள இயலும். மற்றபடி, மனிதர்கள் அனைவருமே ஏதேனும் ஒரு வகையில் அசைவம் தங்கள் உணவில் சேர்வதைத் தவிர்க்க முடியாது.
யார் சைவம் கிடையாது?
காயம்பட்ட விரலை வாயில் வைத்து, ரத்தத்தைக் குடிக்கும் யாரும் சைவம் கிடையாது.
பாலைத் தயிராக்கிய கோடிக்கணக்கான பாக்டீரியாவையும் தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் யாரும் சைவம் கிடையாது.
மிருகங்களின் கொழுப்புகள் தடவிய ஐஸ்க்ரீம், இனிப்புகளைச் சாப்பிடும் யாரும் சைவம் கிடையாது.