வெற்றியை தேடி ஒரு பார்வை

நிழலை போன்ற வாழ்க்கையில்
நிம்மதியாக இருக்க நினைக்காமல்
வெளிச்சமாக தெரிகின்ற எதையோ தேடி,
வேடிக்கையாக மட்டும் பார்த்து நிற்காமல்
அதை தேடிச்செல்லும் வாழ்க்கை பாதையில்,
அருகில் இருப்பதை கூட ரசிக்காமல்
நேசிப்பவர்கள் பலர் உன்னை சுற்றிருந்தும்
நெருங்கி இருப்பவர்களை கூட நினைக்காமல்
தோல்விகள் பல கண்டும்,
தோற்றத்தில் மட்டும் சிரிப்பை வைத்துக்கொண்டு
கஷ்டங்கள் பல கண்டும் கவலைபடாமல்,
இஷ்டமானவற்றை கூட இழந்த பின் வரும்
இன்பம் தான் வெற்றியோ???

எழுதியவர் : தப்ரேஸ் சையத் (20-Jun-18, 2:23 pm)
சேர்த்தது : தப்ரேஸ்
பார்வை : 2754

மேலே