தப்ரேஸ் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தப்ரேஸ்
இடம்:  VILUPPURAM
பிறந்த தேதி :  13-Feb-1997
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-May-2018
பார்த்தவர்கள்:  1510
புள்ளி:  30

என்னைப் பற்றி...

சாப்ட்வேர் இன்ஜினியரிங்,அண்ணா பல்கலைக்கழகம்- திருச்சி

என் படைப்புகள்
தப்ரேஸ் செய்திகள்
தப்ரேஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Mar-2019 5:37 pm

புரியாத புதிராய்,
புன்னகை பூக்கள் அவளோடு பேச,
மாலை நேரத்தில் மறையாமல்,
மயக்கத்தில் சூரியனும் அவளை சுற்றுமோ?
நீ எப்போது வருவாய் என,
நிலவும் ஓரிடத்தில் நின்று பார்க்குமோ?
நிழலாய் நீ என்னோடு இருக்க,
நிலவாய் தினமும் உன்னை ரசிப்பேனடி..!
வானத்தின் நீலம் போல,
வாழ்க்கை எல்லாம் நீங்காமல்,
வாழ்வோம் வா என் நிலவே🖤

மேலும்

தப்ரேஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Nov-2018 5:55 pm

குளிர் காற்று வீசும், மழைக் காலம் இதுவோ...!!!
குடை பிடித்து கொண்டு, உன்னை தடுக்க நினைத்தேன்...
அதை தாண்டி கூட என்மீது வந்து படர்ந்தாய்..
மாலை மங்கும் நேரத்தில்,
மனதை மயக்கிய மழையே,
என்னையும் சேர்த்து நனைத்தாயோ..!!!

மேலும்

தப்ரேஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Oct-2018 1:46 pm

உயரத்தில் அவள் கொஞ்சம் குறைவுதான்...
உருகி கொண்டிருக்கிறேன் நான்...
உயிரென அவளை நினைத்ததால்...
உணர்வினில் அவள் கலந்ததால்..!!!
இதழ் முத்தம் தரும் வேளையில்,
இருவரும் வளைய வேண்டுமோ?
காணாமல் நோடிபொழுதும் இருப்பேனோ?
கட்டி அணைத்து கொள்ளும் வேளையில்,
அவள் முகம் புதைக்க என் நெஞ்சம் ஏங்குமே...
அவளுக்காக என்றும் அது துடிக்குமே...
காரணங்கள் ஏதும் வேண்டுமா?
அவள் மௌன மொழி பேசும் அவள் கண்களை...
கண் இமைக்காமல் பார்ப்பதற்கு..!!!
அவள் முகத்தில் தோன்றும் புன்னகையை,
காண விழி இரண்டு போதுமோ?
விழித்து கொண்டிருக்கிறேன் நான்..!!!
அவள் மேல் காட்டும் அன்புக்கு
அழகாக அவள் தெரிய!!!
ஆறட

மேலும்

தப்ரேஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Sep-2018 7:52 pm

கலைந்த போன கனவை கேட்டால்
கவலையாக இருக்கிறேன் என்று சொல்லும்...
காரணங்கள் பலவிருக்க,
கலங்காமல் நான் காத்திருக்க...
முயற்சி தான் செய்கிறேன்,
முடியாமல் போனால் என்ன?
முடிவு வரை முயன்று தான் பார்ப்போமே...
முடியாதா என்ன???

மேலும்

தப்ரேஸ் - தப்ரேஸ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-May-2018 1:48 pm

மொட்டை மாடியின் உறக்கத்தில்
மௌனமான சூழலில்
சிறுசிறு சத்தங்கள்
சங்கிதமாய் என்னை தாலாட்ட,
தூக்கம் வராமல் நான் இருக்க
விழி திறந்து பார்க்கையில்
விண்மீன் கூட்டம் கண் இமைக்க
வீசும் நிலா வெளிச்சத்தில்
அவள் புன்னகையின் பொலிவை காண,
அவள் நினைவுகள் என்னை தொடர
அருகில் இருக்க நினைதேனே,
அன்பாய் பேச,என் அழகே...!!

மேலும்

தலைப்பில் இருக்கும் அதிர்வு கவிதையிலும் வந்தால் நன்று. படைப்பை நுட்பமாகுங்கள் 21-May-2018 12:15 am
தப்ரேஸ் - தப்ரேஸ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-May-2018 4:29 pm

தவறுகள் தப்பாக தெரிவதில்லை
தனிமை உணர்வு என்னை தேடும் வரை...!!!
என் மனமோ மன்னிப்பு கேட்பதில்லை
உன் நினைவுகள் என்னை வாட்டும் வரை...!!!

மாறும் காலநிலையில்
மாற்றங்கள் என்னை தொடர,
மனம் ஏங்கும் தருணமோ,
மன்னிப்பு என்ற வார்த்தை சொல்ல...!!!
என்ன நீ சொல்வாயோ..?
மறுத்து விடுவாயோ?
இல்லை அனைத்தையும் மறந்து
மனதார மன்னித்து விடுவாயோ..!!!

பிழைகள் ஏதும் நான் செய்தாலும்,
பிரியாமல் இரு என் உறவே...!!!
கோவம் ஏதும் இருந்தாலும்,
கூடவே இரு என் உயிரே...!!!
பேசாமல் ஏதும் நான் இருந்தால்,
பாசத்தோடு இரு என் நட்பே...!!!
நினைக்க ஏதும் மறந்தாலும்,
நீங்காமல் இரு என் மனமே..!!!

மேலும்

கருத்துக்கு நன்றி... 20-May-2018 1:39 pm
மன்னிப்பு ஆராத வலிகளையும் கரைக்கும். நீ செய்த தவறுகளை நீ உணரும் போதே முதல் மன்னிப்பு கிடைக்கிறது.---அருமை 20-May-2018 1:28 pm
தப்ரேஸ் - தப்ரேஸ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-May-2018 4:29 pm

தவறுகள் தப்பாக தெரிவதில்லை
தனிமை உணர்வு என்னை தேடும் வரை...!!!
என் மனமோ மன்னிப்பு கேட்பதில்லை
உன் நினைவுகள் என்னை வாட்டும் வரை...!!!

மாறும் காலநிலையில்
மாற்றங்கள் என்னை தொடர,
மனம் ஏங்கும் தருணமோ,
மன்னிப்பு என்ற வார்த்தை சொல்ல...!!!
என்ன நீ சொல்வாயோ..?
மறுத்து விடுவாயோ?
இல்லை அனைத்தையும் மறந்து
மனதார மன்னித்து விடுவாயோ..!!!

பிழைகள் ஏதும் நான் செய்தாலும்,
பிரியாமல் இரு என் உறவே...!!!
கோவம் ஏதும் இருந்தாலும்,
கூடவே இரு என் உயிரே...!!!
பேசாமல் ஏதும் நான் இருந்தால்,
பாசத்தோடு இரு என் நட்பே...!!!
நினைக்க ஏதும் மறந்தாலும்,
நீங்காமல் இரு என் மனமே..!!!

மேலும்

கருத்துக்கு நன்றி... 20-May-2018 1:39 pm
மன்னிப்பு ஆராத வலிகளையும் கரைக்கும். நீ செய்த தவறுகளை நீ உணரும் போதே முதல் மன்னிப்பு கிடைக்கிறது.---அருமை 20-May-2018 1:28 pm
மேலும்...
கருத்துகள்

மேலே