இரவு மொட்டை மாடி உறக்கம்
மொட்டை மாடியின் உறக்கத்தில்
மௌனமான சூழலில்
சிறுசிறு சத்தங்கள்
சங்கிதமாய் என்னை தாலாட்ட,
தூக்கம் வராமல் நான் இருக்க
விழி திறந்து பார்க்கையில்
விண்மீன் கூட்டம் கண் இமைக்க
வீசும் நிலா வெளிச்சத்தில்
அவள் புன்னகையின் பொலிவை காண,
அவள் நினைவுகள் என்னை தொடர
அருகில் இருக்க நினைதேனே,
அன்பாய் பேச,என் அழகே...!!