நதிக்கரையின் நினைவலைகள்

வேரி ல்லா மரம் விறகாகிடும்
சோறி ல்லாவூர் மயானமாகும்
தேரி ல்லாவூரில் தெய்வபயமேது
ஆறி ல்லாநா டொரு முழுநா டாமோ
நீரி ல்லாவுலகு முலகாமோ வது
மண் ணாங்கட்டி சுழற்சி யேயாகு மொரு பேரில்லா ப்பாலை வனமாகிடுமே


ஆறேரி குளங்குட்டை நிறம்ப
ஆறோடாறு கோர்த் திடுவோம்
தூறுவாரி க்காக்க ச்சபதம்
யாராயி னுமெடு த்திடுவோம்
ஆக்ர மிப்பதனை யுமகற்றிடல்
அவ சியத் திலுமவ சியமே இது
நெடு நாளைய நினை வலைகள்
எழுந்தெழுந்து ப்பார்த்து வீழ்கிறதே


ஆற்ற ங்கரையோ ரம்பாரந் தறித்து நல்ல பூங்காவனம் அமைத்திட
ஓங்கா க்கண் தூங்காயினம் வளம் பெறவே காத்திடுவோம் 
கஞ்சி வார்த்திடுவோம் தீராப்பஞ்சம் போக்கிடுவோம் 
இது நெடு நாளைய நினைவலைகள்
வீழ்கிறது மாய்கிறது


ஆங்காங்கே வண்டல்கள் மேடெழுப்பி
வழிமறிக்க லாயிற்று
ஆங்காங்கே ரசாயண குழம்புகள் சாக் கடையாய் கிடக்கிறது
ஆங்காங்கே நதியோர நிலங்கள் விரிவு
நதியோ குறுகி போகிறது
இது நெடு நாளைய நினைவலைகள்
வயிறு எரிகிறதின்றும்


பருவமழை பொய்த்த தொரு காரணமா
பெய்த மழைநீரதனை
தேக்கிட முயற்ச்சி கொண்டார் யார் 
யாருமில்லை உண்மை
வரும் சந்ததிக்கு இவ்வறட்சியை தான்
பரிசாக அளிப்போமோ
வளமான நாட்டை அவர்கள் கைகளில்
ஒப்படைக்க க்கூடிடுமோ
இது நெடு நாளைய நினைவலைகள்
எண்ணம் நிறைவாகுமோ


தாயில்லாமல் வாழ்தாலும் வாழலாம்
தவிச்ச வாய்க்கு பச்சை
தண்ணீரில்லாமல் வாழ்ந்திடலாகுமோ
சரித்திரத்திலே இல்லை
இந்த நோயில்லாமலிருக்க நாங்கள்
நோன்பிருக்க தயங்கோம்
நதிக்கரையின் நினைவலைகள் எழும்
பொழுதெல்லாம் வேதனையே


வனவிலங்கினம் எண்ணிக்கைக்குள்
அடங்க வந்துவிட்டது
பறவையினம் நீருக்கு நாடோடிகளாய்
வலம் வருகின்றது
பசுமை புறட்சியிங்கே துவங்கிவிட்டது
மூலைக்கு மூலை
உழுவோர் நயணங்களில் சிதரும் வைர
மணிகள் சரமாவிடோம்

••••••••••
ஆபிரகாம் வேளாங்கண்ணி எழுதிய
*நதிக்கரையின் நினைவலைகள்*
கவிதைமணியில்
மும்பை /மகாராஷ்டிரம்.

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (20-May-18, 8:09 am)
பார்வை : 93

மேலே