நூறாண்டு வாழும் மலர்
வாசமும் இருக்கணும்
பாசமும் இருக்கணும்
நேசமும் இருக்கணும்
கூச்ச நாச்சம் என்கிற
வாசகமும் இருக்கணும்
அதன் பெயர்கூட மலரே
ஒரேயொரு நாள் மட்டும்
உயிர் வாழும் மலரில்லை
நூறாண்டு வாழும் மலராக
இருந்திடல் வேண்டும் அது
வாழும் வாழ்க்கை
சாக்கடை யானாலும்
மனது மட்டும் என்றும்
பூக்கடைபோல் வாசம்
வீசியவாறு பக்குவமாக
வைத்திருக்க சொர்க்கம்
தேவை இல்லை புழங்கும்
இடமே சொர்க்கம் மாகிடும்
°°°°°°°
ஆபிரகாம் வேளாங்கண்ணி
மும்பை மகாராஷ்டிரா