வா என் நிலவே🖤

புரியாத புதிராய்,
புன்னகை பூக்கள் அவளோடு பேச,
மாலை நேரத்தில் மறையாமல்,
மயக்கத்தில் சூரியனும் அவளை சுற்றுமோ?
நீ எப்போது வருவாய் என,
நிலவும் ஓரிடத்தில் நின்று பார்க்குமோ?
நிழலாய் நீ என்னோடு இருக்க,
நிலவாய் தினமும் உன்னை ரசிப்பேனடி..!
வானத்தின் நீலம் போல,
வாழ்க்கை எல்லாம் நீங்காமல்,
வாழ்வோம் வா என் நிலவே🖤

எழுதியவர் : தப்ரேஸ் சையத் (19-Mar-19, 5:37 pm)
சேர்த்தது : தப்ரேஸ்
பார்வை : 306

மேலே