என்னவள்

உன் முகம் பூரண சந்திரனின்
ஒளியென என்னுள் தாக்கம் தர
உந்தன் புன்னகையோ சந்திரனின்
அமுத கிரணமாய் என்னுளத்தில் பாய்ந்து
காதலமுதம் ஊட்டியதே என் இதயத்திற்கு
எந்தன் இனியவளே இந்துமதியே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (19-Mar-19, 5:22 pm)
Tanglish : ennaval
பார்வை : 91

மேலே