அவள் உயரம் குறைவுதான்

உயரத்தில் அவள் கொஞ்சம் குறைவுதான்...
உருகி கொண்டிருக்கிறேன் நான்...
உயிரென அவளை நினைத்ததால்...
உணர்வினில் அவள் கலந்ததால்..!!!
இதழ் முத்தம் தரும் வேளையில்,
இருவரும் வளைய வேண்டுமோ?
காணாமல் நோடிபொழுதும் இருப்பேனோ?
கட்டி அணைத்து கொள்ளும் வேளையில்,
அவள் முகம் புதைக்க என் நெஞ்சம் ஏங்குமே...
அவளுக்காக என்றும் அது துடிக்குமே...
காரணங்கள் ஏதும் வேண்டுமா?
அவள் மௌன மொழி பேசும் அவள் கண்களை...
கண் இமைக்காமல் பார்ப்பதற்கு..!!!
அவள் முகத்தில் தோன்றும் புன்னகையை,
காண விழி இரண்டு போதுமோ?
விழித்து கொண்டிருக்கிறேன் நான்..!!!
அவள் மேல் காட்டும் அன்புக்கு
அழகாக அவள் தெரிய!!!
ஆறடி உயரம் தேவையா???
அவள் பேச்சின் இனிமையும்...
அவள் பார்வையின் கூர்மையும்...
அவள் மனதின் தூய்மையும்...
அப்போ அப்போ வரும் அவளின் வெட்கமும்...
எப்போவும் தலை சாய்த்து பேசும் அந்த அடக்கமும்...
அவளுக்கு வேறு ஏதும் வேண்டுமோ???
என் அன்பிற்குரியள் அவள்...
ஆம்..!!!
அவள் உயரம் குறைவுதான்...!!!

எழுதியவர் : தப்ரேஸ் சையத் (21-Oct-18, 1:46 pm)
சேர்த்தது : தப்ரேஸ்
பார்வை : 760

மேலே