வாடாதே என் தாயே

என் அழகு தேவதையே
ஏனிந்த கண்ணீரு
ஆண்டவன் நம்மை
ஆசைப்பட்டாய் படைத்தான்
உன் உயிரும் நான்தானே
உன் உறவும் நான்தானே
பிஞ்சு என் குரலுக்கு
பிரளயமும் உருவாகும்
பார்ப்பவர்கள் நகைக்கட்டும்
பழி சொல்லும் கூறட்டும்
அஞ்சி அஞ்சி வாழ வேண்டாம்
அரிமா போல வாழ்ந்திடுவோம்
ஆசைப்பட்டு நீ பெத்த மக
ஆளாகி நாடாள வேண்டாமா
நல்லவங்க கூட இருந்தா
நானிலத்தில் வாழ்ந்திடலாம்
வாடாதே என் தாயே
வண்ணமுகம் சுண்டிவிடும்
கனவுகளுடன் பிறந்த மக
காட்டாறாய் மாறிடுவாள்
ஆண்டுகள் உருண்டோடும்
ஆர்த்தெழுவேன் சூரியனாய்
கலங்காதே என் தாயே
காலமது பதில் சொல்லும்
ஏழ்மை அது நீங்கிவிடும்
ஏனிந்த சோகம் அம்மா!!!!

எழுதியவர் : உமாபாரதி (21-Oct-18, 1:21 pm)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
பார்வை : 93

மேலே