யதார்த்தங்கள்

தேவதைகள்
வானத்தில் மட்டுமே இருப்பதில்லை
பூமியிலும் வசிக்கத்தான் செய்கிறது

ஆயினும் நம் கற்பனையை தாண்டிய
அவைகளின் செயல்பாடுகள் யாவும் யதார்த்தமே . . .

ஆம் . . .

தேவதைக்கும் ஆசையுண்டு
தேவதைக்கும் பாசம் உண்டு
தேவதைக்கும் காதல் உண்டு
தேவதைக்கும் கோபம் வரும்

தேவதைக்கும் திட்ட தெரியும்
தேவதைக்கும் அடிக்க தெரியும்
தேவதைக்கும் கொஞ்ச தெரியும்
தேவதைக்கும் சமைக்க தெரியும்

தேவதைக்கும் நடக்க தெரியும்
தேவதைக்கும் என் தோளில் சாய தெரியும்
தேவதைக்கும் என் கையை பிடித்து
நெடுந்தொலைவு நடக்க பிடிக்கும்

தேவதைக்கும் அழகான குழந்தை பிறக்கும்
தேவதைக்கும் காய்ச்சல் வரும்
தேவதைக்கும் வலிகள் உண்டு

அனைத்தையும் விட

தேவதைக்கும் குடும்பம் நடத்த தெரியும்

கனவில் மட்டுமே தேவதைகள் வருவதாய்
கதைகளில் படித்த எனக்கு
தினமும் ஆச்சரியம்தான்

தேவதை . . .
என் மனைவியாக
என்னோடு தினமும் வாழ்கிறது என்பதை உணர்கையில்


பின் குறிப்பு

எல்லா தேவதைகளும் வெள்ளை உடையில்
சிவந்த மேனியுடன் மட்டுமே இருப்பதில்லை . . .

வண்ண உடைகளில்
கொஞ்சம் மாநிறமாகவும்
இருக்கத்தான் செய்கிறது . . . .

எழுதியவர் : ந.சத்யா (16-Sep-18, 5:10 pm)
சேர்த்தது : சத்யா
Tanglish : yathaarthangal
பார்வை : 343

மேலே