சாந்தி வேண்டும் மனமே

பூவாய் வந்து சண்டைப்
பரிவட்டம் தாங்கி இன்று
புயற்காற்றாய் வீசும்
புன்னகை ராட்சுசியே
சொற் தேனில் விஷம் குழைத்து
துளி துளியாய் பருகத் தரும்
பெண் தென்றல்ப் புயற் காற்றே,

அருவியாய் வந்தாய் அன்று
மகிழ்வு நீர் விசிறி என்
மன வெப்பம் தணித்தாய்
இன்று கட்டுக்கடங்காமல் ஓடும்
காட்டாற்று வெள்ளமானாயடிநீ
தோழில் தாங்கினேனடி
உன் சுமையை
இதய தூணில்
தாங்கினேனடி உன்னுருவை
பனையிலும் ஓலை இல்லை
என் பாதரவு கூற
என் தமிழ் பாதிரத்தில்
எழுத்து அரிசி இல்லை,
என் மனக்க கவலைக்கு தீனி போட,

இடியாய் வீழாதே
என் சொர்க்க பூமியில்
புயற் காற்றாய் வந்து என்
சமாதான தேசத்தில்
சுனாமி வீசாதே
கொம்பு சீவி போர்ப்
பிரகடனம்நடத்தும்
காட் டு எருமை அல்ல நான்
சமாதானத்தையே நிதமும்
நேசிக்கும் கஸ்தூரி மான்


அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (16-Sep-18, 4:56 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 77

மேலே