காதல்

உன் பார்வையின் அர்த்தங்கள் நூறாயிரம்
என்று மலைத்துப்போனது எதிர் பார்வையான
என் விழிகளின் பார்வை, பதில் சொல்ல தெரியாது;
அப்போது உன் பார்வையில் ஓர் அர்த்தம் எனக்கு
தெரியவந்தது, அதுவே" இந்நாள்வரை என்னைப்
பார்த்து பார்த்து பதில் மொழி கூட கண்களில்
சொல்லாத உன் பார்வைக்கு இது ஏன் தெரியலையோ,
ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும் என் பார்வையில்தான்
'நான் உன்னைக் காதலிக்க இசைகிறேன். என்ற
மொழியும் இருக்கிறது அதை முதலில் பார்,
பார்த்து உன் பார்வையில் 'உன் சம்மதம் ' கண்டுகொண்டேனடி
என்று கூறு,அன்றுதான் உன்னோடு மட்டுமே என்
பார்வையும் பேசும், என் இதழ்களும் திறந்து
உன்னை வரவேற்கும்" இதோ நாளையே நீ
ஏன்' இன்றேவந்திடக்கூடாது' என்ற துடிப்பில் நான்,
அவளை மீண்டும் சந்திக்க ............துடிக்கின்றேனே!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (16-Sep-18, 4:36 pm)
Tanglish : kaadhal
பார்வை : 172

மேலே