என் மரணம்

என் மரணத்தின் போது
என் காதலிக்கு மட்டுமே
என் அருகில் இடமுண்டு
என் கடைசி கண் சிமிட்டலை
அவள் உதடுகளே முடித்து வைக்க வேண்டும்
என் கடைசி முத்ததின் மணித்துளிகள்
இடைவேளை இன்றியும், அதில் என்
கடைசி சுவாசம் நின்றவுடன்
ஒரு முறை அவள் அவள் மூச்சில்
சுவாசிகத்து இறக்க வேண்டும்
என் கல்லறையில் என்னை அவள்
மட்டுமே அடக்கம் செய்ய வேண்டும்.
ஏதோ நிலையான வாழ்வு என்கிறார்களே
அதை அவள் மனதிலேயே நிலைத்து வாழ வேண்டும்
காதல் மட்டுமே வாழ்வின் நிறைவு என
பலர் நினைக்கும் வரை வாழ்ந்து
இறக்க வேண்டும்