உன் அழுகையின் ரசிகன் நான்
உன் அழுகையின் மிகப்பெரிய ரசிகன் நான்
நீ அழுவாய் நான் ஆறுதல்
கூறுவதாய் கொஞ்சம் மகிழ்ந்து கொள்வேன்
உன் அழுகையில் நான் சுதந்திரமாய்
உன்னை கொஞ்சலாம்
உன் கன்னம் கண்ணீரோடு என் முத்தங்களை சுவைத்துக்கொள்ளும்
அழும் போது தான் ஒருவன்
குழந்தையாகிறான் அவனின்
அனைத்து வேதனையும் அவனை அறியாமல்
தறையில் மழையாய் கொட்டுகிறது
அழுதுவிட்டு பின் தத்துவங்களும் பேசத்தொடங்குவான்
ஆனால் உன் அழுகையின் சிறப்பு என்ன தெரியுமா? அது தறையில் கொட்டாமல்
என் மார்பில் முட்டுகிறது.
அதில் நீ பாராத குழந்தையை நான்
அணைக்கிறேன், நான் பாராத தந்தையை
நீ உணர்கிறாய்.
அழுத பின் உன் கூச்சங்களை கீச்சிப்பதே
நானும் குழந்தையானதற்கு சாட்சி.
இது ஏதோ உடல் உணர்ச்சி அல்ல
உன்னை அழும்போதும் என் மனம்
ரசிக்கத்தான் செய்கிறது.