காதல்
மையிட்ட உந்தன் மலர்விழிகள்
தந்த பார்வையின் மையலில்
நான் மயங்கி நின்றேன் -அத்தருணம்
உந்தன் செவ்வாய் மலர்ந்து மலராது
தொடுத்த புன்னகையில் நான் விழித்துக்கொள்ள
தாமரைக்கொடியே தடாகம் துறந்து
நடந்து வருவதுபோல் கண்டேனே
என்னவளே உன்னை உந்தன்
கொடி இடை நடை அழகில்
என்னருகே வந்து நின்றாய்
இன்னும் என்ன தயக்கம் மன்னவனே
என்னை அள்ளி அணைக்க என்பதுபோல்
அக்கணமே என் மலர்க்கொடியை
அள்ளி அணைத்தேன் கோதிய அவள்
கார்மேகக்கூந்தல் என் மார்பில் அலைய
அது தந்த மல்லியின் சுகந்தம்
காமன் தொடுத்த அம்பாய் என்னுளத்தில் பாய
ஒருவர் ஒருவரை மறந்தோம் சேர்ந்தோம்
இணைந்தோம் நெஞ்சம் காதல் சொர்கம் தேட