என்னில் நீயானாய்
கனவா!
நினைவா!
•
•
நான் காண்பது புது உலகா!
•
•
என் கண்முன்னே
என் காதல் நிலவா!
•
•
கைகள் நீட்டி
என் கன்னம் தாக்கி!
கலர்பூசி நகரும்
அந்த விண்மீன் நிழலா!
•
•
உன் விரல் தீண்டிய பின்
என்ன நடந்தது என்று
எனக்கொன்றும் ஞாபகமில்லை!
•
•
அந்த நொடியில் இருந்து
என்னை ஏனோ காணவில்லை!
•
•
நீ எனை தேடித் தரும் வரை
வேண்டும் இந்த மயக்கநிலை!
•
•
என்னில் நீயானாய் போதும்
எனக்கொன்றும் வேறு தேவையில்லை!!!
•
•
கவிதைகளின் காதலன்
❤️சேக் உதுமான்❤️