மனம் தேடிய தேவதை
என் கற்பனைகளில் மட்டுமே
வாழ்ந்துக் கொண்டிருந்தது
என் காதல்!
•
•
கன்னி உனை கண்டேன்
என் கருவிழி முழுதும்
ஆட்கொண்டாய்!
அப்படி ஒரு அழகு😍
•
•
நேற்றுவரை நான் கண்டதில்லை
இப்பூமிபந்தில் இன்று கண்ட
உன்போல் அழகு😘
•
•
சில அழகுகளைச் சொல்ல
வார்த்தைகள் தேவையில்லை..
•
•
உன்னில் வாழ்ந்து பார்க்கச் சொல்லி
நெஞ்சம் செய்கிறது ஆனந்த தொல்லை
•
•
அன்பான அகமழகி!
மஞ்சள் நிற முகமழகி!
•
•
பட்டென்று ஈர்க்கும் பார்வையில்
சாயும் மனம் ஒருபுறம்...
படபடவென்று பேசும் பேச்சில்
காயும் உயிர் மறுபுறம்...
•
•
இவ்விரண்டும் என் மனதிலிருந்து
காலத்திற்கும் மறக்காது கண்மணியே!
•
•
உனக்காக நான் செய்யும்
சின்ன சின்ன செயல்களில் கூட
என் காதல் அதிகமாக வெளிப்படுகிறது..
•
•
அன்பே!
என் மேல் உனக்கென்ன?
அத்தனை காதல்..
அத்தனை ஆசை..
அத்தனை பாசம்..
அத்தனை நேசம்..
நான் என்ன செய்தேன்?
•
•
உன்னை காணாமல் இருந்திருந்தால்
அன்பின் ஆழம் என்னவென்று
அறியாமல் அழிந்திருப்பேன்...
•
•
உன் அன்பு
இதுநாள்வரை நான் உணர்ந்திடாத
ஓர் புதுமை..
•
•
உன் அழகு
இதுநாள்வரை நான் கண்டாத
தங்கப் பதுமை..
•
•
என் அருகில் நீ இருந்தால்
என் வாழ்க்கை ஒரு இனிமை..
•
•
இனி தேவையில்லை
எனக்கு இந்த தனிமை..
•
•
இனி உனக்காக வாழ்வேன்
என் வாழ்க்கையின் மீதி பாகங்களில்..!
•
•
கவிதைகளின் காதலன்
❤️சேக் உதுமான்❤️