என் கவிதைகள் எல்லாம்

பெண்ணே!
நீ என் கண்ணில் படும்
நேரமெல்லாம்
நான் கிறுக்கிய கவிதைகள் யாவும்
என் மனமெனும் மதில்சுவர் தாண்டி
ஒன்றோடு ஒன்று
மல்லுக்கட்டிக் கொண்டு நிற்கிறது...
மங்கை உன் மதிமுகம் கண்டு
மயக்க நிலைக்கு சென்று...
கவிதையின் வரிகளை
நீ உச்சரித்து முடிக்கும் போது...
உன் உதட்டு வரிகளில்
என் உயிர் வரிகள் கலந்து...
உன் உள்ளத்தில் நிறைந்து...
உன் சுவாசத்தில் படர்ந்து கொள்ள
இதயமின்றி துடிக்கின்றது!
கண்களின்றி கண்ணீர் வடிக்கின்றது!
உனை காதலியாக்கிக்கொள்ள நினைக்கிறது..!

❤️சேக் உதுமான்❤️

எழுதியவர் : சேக் உதுமான் (15-Dec-20, 6:24 pm)
Tanglish : en kavidaigal ellam
பார்வை : 363

மேலே