உன் மார்பினில்

உன் மார்பினில்
என் முகம் புதைந்த
நிமிடங்களையெல்லாம்
நினைத்துப்பார்த்தால்
என் மனம் மயங்கி போகின்றது...
மீண்டும் ஒருமுறை
புதைந்து போக மனம் ஏங்குகின்றது...
மறுமுறை நிமிடங்களில் இல்லாமல்
மணிக்கணக்காய் உன் மார்பினில்
மதியிழந்து கிடக்க ஆசை கொள்கிறது
இந்த ஆணின் மனம்...!

❤️சேக் உதுமான்❤️

எழுதியவர் : சேக் உதுமான் (15-Dec-20, 6:23 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
Tanglish : un MARBINIL
பார்வை : 438

மேலே