அந்ந ஓர் நொடி

நமக்கு மிக பிடித்தவர்கள்
நம்மை கட்டி அணைக்கிற
அந்த ஓர் நொடி
நாம் கண்ட கஷ்டங்கள்
நாம் கொண்ட கோபங்கள் யாவும்
தோற்றுப் போய்விடுகிறது...
அவர்களின் அன்பான
அரவணைப்பிற்கு முன்னால்!!

ஆயரமாயிரம் வார்த்தைகள் சேர்த்து
ஆறுதல் சொல்வதை விட..
ஆழமான ஒரு அணைப்பு போதும்
நம் மனம் ஓர் மழலையாய்
அவர்முன் மயங்கி நிற்கும்..!

❤️சேக் உதுமான்❤️

எழுதியவர் : சேக் உதுமான் (15-Dec-20, 6:20 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
பார்வை : 394

மேலே