நீ இருக்கும் போது
அன்பு செய்து
ஆறுதலாய் அணைத்துக் கொள்ள
எனதருகில்
"நீ" இருக்கும் போது
அனைவரும் இருக்கும்
இந்த அகிலம் நமக்கெதற்கு!!!
நம்மை இம்சிக்கும் இவ்வுலகத்தை
அரைவிலைக்கு விற்றுவிட்டு
அதே கையோடு
வேறு ஒரு உலகை
அமேசானில் அர்டர் செய்து
வாங்கி கொண்டு
வான் தாண்டி பறந்து செல்வோம்!!
ஊன் விட்டு உயிர் போகும் வரை
காதல் கொள்வோம்!!!
❤️சேக் உதுமான்❤️