உடைந்த வீடு
உடைந்த வீடு அது எங்கள் வீடு .
சபரிமலை படிக்கட்டு போல் பதினெட்டு படி இருக்கும் . படிப்படியாய் அடியெடுத்து மேலே வந்தால் நினைத்தபடி வீடு இருக்காது . நினைத்த துணியும் காய்ந்திருக்காது மழைகாலத்தில்.
உடைந்த வீடு ......
எங்கள் வீட்டில் கதவிருக்காது ஆனால் இரும்பால் செய்த பூட்டு பூத்துக்குலுங்கும்.
எங்கள் வீட்டில் அண்ணாந்து பார்த்தால் ஆகாயம் தெரியும் . தலைகுனிந்து பார்த்தால் கீழ் வீடு தெரியும் .
எங்கள் வீட்டில் மேலே ஓடு ஒட்டியிருக்கும் அதன் ஓரத்தில் ஒடிந்திருக்கும் தார்ப்பாய் போட்டு மூடி வைத்தால் காற்றில் அது கண்ணடிக்கும் .
எங்கள் வீட்டில் ஆறு ஓடும் மழை பருவம் தார்ப்பாய் வழியே அருவி கொட்டும் தக்க சமயம் .
எங்கள் வீட்டில் அடுப்பெறிய ஆப்பிள் பொட்டி மாவரைக்க உரலை உருட்டி சாப்பிடுவோம் கொசுவை விரட்டி .
எங்கள் வீட்டில் பூ பூக்காமல் இருக்க பனியில் வைப்போம் நல்ல நாளிலே தலையில் வைப்போம் .
எங்கள் வீட்டில் சட்டையில் அழுக்கை கையால் உடைப்போம் பள்ளிக்கு செல்ல சைக்கிளை காலால் மிதிப்போம் . உடைந்த வீட்டினை உடைத்து உயரமாக்க நன்றாக படிப்போம் .
உடைந்த வீடு ......