முள்ளுக்காட்டு இதிகாசம்

சிவந்த உள்ளங்கால்கள் அங்கங்கு முட்களால் குத்தி கசியும் இரத்தத்தால் சிவந்த உள்ளங்கால்கள் அவை நடக்க மறுக்கவில்லை ஏற்பட்ட வலியால்.

வாழ்ந்த காதல்கள் பல அந்த முள்ளுக்கட்டில் விறகு பொறுக்கியே கடந்த காதல்கள் பல.

என்ன மாமா! இன்னைக்கு நெரத்தோட வந்திட்டியளாக்கும்!?

ஆமா புள்ள!
உன்ன பார்க்க நேரத்தோட வந்துட்டேன் இன்னைக்கு!

உமக்கு கொழுப்பு ஏறிப் போச்சு!
ஒழுங்கா விறகு வெட்டுற வேலையா பாரும்!

என்ன புள்ள! தனியா வந்திருக்க!
உன் தங்கச்சி வரலையா?

ஆமா உமக்கு என் தங்கச்சியை வேற கண் தேடுதாக்கும்!
வேலையைப் பாருமையா!

நக்கலும் நையாண்டியும் மிளிரும் அந்த முள்ளுக்காட்டில் கயமை எண்ணத்தோடு பாலியல் வன்புணர்வு நடந்ததாக ஞாபகமில்லை.

நாட்டு முள் உள்ளங்கால் புகுத்து படக்காலில் எட்டிப்பார்த்த நேரம்
எருக்கம் பாலும், கரிப்பானிலையுமே மருந்தாகும்.
வலித்தாலும் கால்கள் நடக்க மறந்ததில்லை.

முட்கள் காயப்படுத்தினாலும் இந்த முள்ளுக்காட்டை வெறுத்ததில்லை.
ஏலேலோ பாட்டு சத்தம் காது இனிக்கக் கேட்கும்.

காலை சென்ற கூட்டம் மாலையே வீடு திரும்பும்.
மத்தியான வெயில் ஆடுகளுக்கெல்லாம் அந்த முள்ளுக்காடே சொர்க்கம்.
அருமை, பெருமையை சொல்லி நிற்கிறது அந்த காடு.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (9-Jan-19, 12:20 pm)
பார்வை : 1224

மேலே