மனித இனத்தின் வீழ்ச்சி

ஊன மனத்தாரே!
ஊனில் வளர்ந்தாரே!
சிந்தனையெல்லாம் நிணத்தில் வைத்தாரே!
கூன மனத்தாரே!
குறுகிய வட்டத்திற்குள் கூம்பிடு போட்டு பிழைப்போரே!

நாணலாய் வளையும், உங்கள் கொள்கை சுயலாபத்திற்காக.
காணலில் தோற்றீர் நீதி அறியாத மூடர்களாய்.
பாணலில் சுண்ணாம்பு தடவி பாக்குடன் சேர்த்து வாயிலிட்டு மென்றால் வாய் சிவக்கும்.
பல நோய்களைக் குணமாக்கும்.

அதே செயலை பல் துலக்காமல் நாக்கை வளிக்காமல் தொடர்ந்து செய்தால் நா தழும்புகள் ஏற பற்களும் கெட்டு உதிர்ந்து போகும்,
அதுபோல் உள்ளன உங்கள் செயல்பாடுகள்.

அவற்றிலே நீதி இல்லை.
சமத்துவம் இல்லை.

எது நீதி?
தன் இனத்திற்காக போராடுவது மட்டுமல்ல,
அனைத்து மக்களுக்கும் சம உரிமை வழங்கப்படுவதே நீதி.

நீதி அறியாத நீங்கள் மனித சமூகத்தில் பிறந்தது மனித இனத்தின் வீழ்ச்சி.
உங்களை காண்பதே பெரும் பாவம்.
உங்களோடு தொடர்பு கொள்வது ஆணிபடுக்கை மேலே வீழ்வதற்கு சமம்.

உலகை பிடித்த சாத்தான்களே!
ஒழிந்து போங்கள்.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (8-Jan-19, 10:57 pm)
பார்வை : 1589

மேலே