புலம்பல்களே வாழ்க்கையாய்
கைய்யில் கிடைத்ததை
தொலைத்து
கற்பனையிலேயே காலந்
தள்ளி
தவறுக்கெல்லாம் நியாயம்
கற்பித்து
எல்லாம் தெரியுமென்ற
மமதையில்
யார்சொல்லையும் கேளாது
சுயநலப்போர்வைக்குள்
தினிந்து
மந்தையைவிட்டு விலகிய
வெள்ளாடாய்
சுற்றித்திரிந்து காலம்போன
பின்
புலம்பல்களே வாழ்க்கையாய்
விதைத்தது முளைத்தது
கொடுத்தது கிடைத்தது