சக்கை போடு போடு ராஜா
நண்பனே நண்பனே நலம் பல காண்போமா
நன்னாள் தான் எந்நாளும் நவினத்தை காண்போமா
பிணியான மனமதனை புதிதாக செய்வோமா
கேலியான வார்த்தைதனை கேட்காமல் இருப்போமா
ஆயுள் அது முடியுமுன்னே அருமை செயல் செய்வோமா
பாசம் பரிதாபம் பகுத்தறிந்து கொள்வோமா
வேசத்தை போர்த்திருப்போர் விரதத்தை முடிப்போமா
காசுதான் பிரதானமெனும் கனவுதனை அழிப்போமா
கருவிழி போல நம் தாய்மொழியை காலந்தோறும் மதிப்போமா
கற்புப் போல் எப்போதும் நம் வாக்குதனை கொள்வோமா
கஷ்டமான காலத்திலும் கடமைதனை செய்வோமா
கண்மூடி பயணிக்கும் கயமைதனை அறுப்போமா
கண் முன்னே சாவுவறின் கலங்காமல் இருப்போமா
மனித பிறவி என்பது மகத்துவம் அதை மாட்சிமையாக மாற்றுவோமா...
- - நன்னாடன்

