பெண்ணியம்- 2

.................சுதந்திரம் தொலைந்ததேனோ.........
நெருப்பு சுடும் இருந்தாலும் சமைக்கச் சொல்வதேனோ!
ஆனால் ஆடவர்க்கு மட்டும் பயந்து, வீடே சிறையாகி -
பெண்ணின் வாழ்க்கையே ஆயுள் கைதியாகிப் போனதேனோ!
துன்பம் நெருங்கிவந்தால் துணிந்து தற்காத்துக் கொள்ளும் முறையைக் கற்றுத்தர மறந்தது ஏனோ!
மதம் கொண்ட சில மானிடர்களால் மகளிரின் சுதந்திரம் தொலைந்ததேனோ!

.............மகிழ்ச்சி தொலைந்ததேனோ............
அன்றோ! ஓடி விளையாடு பாப்பா, - நீ
ஓய்ந்திருக்கலாகாது பாப்பா!
இன்றோ! வெளியே விளையாடாதே பாப்பா நீ –
குழந்தையாக இருந்தாலும் உன் கற்புக்கும் பாதுகாப்பில்லை பாப்பா!
பெண் குழந்தைகளுக்கு ஆண்கள் எல்லாம் பூச்சாண்டியாகியது ஏனோ!
மதிகெட்ட கயவர்களால் மகளிரின் மகிழ்ச்சி தொலைந்தது ஏனோ!


..............கனவு தொலைந்ததேனோ.........
கல்வி கற்கும்போது வந்த கனவுகள் கல்யாணத்திற்குப் பின் காலாவதியாவதேனோ!
கடமையில் கட்டுண்டு கனவுகள் தொலைவதேனோ!
தாரம்மான பின் பெண்ணின் திறமைகள் தொலைவதேனோ
சாதிக்க துடிக்கும் கன்னியரின் கனவுகள் காதலால் திசைமாறிப் போவதேனோ!

................பாதுகாப்பு தொலைந்ததேனோ............
வேலியே பயிரை மேய்வது ஏனோ!
பருவம் தாண்டா பச்சிளம் பிள்ளைகளுக்கு கூட-
பாதுகாப்பில்லை ஏனோ!
மானங்காத்த மனிதம் எங்கே
மதிகெட்டு மானம் பறிப்பது ஏனோ இங்கே!

வர்ணங்கள் இல்லையேல் வானவில் அழகு இல்லை
பஞ்சபூதங்கள் இல்லையேல் உயிரினங்கள் உயிர் வாழ்வதில்லை
பெண் இல்லையேல் இந்த பூமியில் ஜனனமில்லை
கற்றுக்கொடுங்கள் ஒவ்வோரு ஆண்பிள்ளைக்கும் பெண்களைக் காப்பது கடமையென்று.
அபயம் அளிக்கும் கரங்களே அபாயங்கள் அளிபதேனோ !!!

--கவி கயல்

எழுதியவர் : கயல் (7-Apr-19, 6:49 pm)
சேர்த்தது : கயல்
பார்வை : 919

மேலே