மரம் தந்த வாழ்க்கை பாடம்

காலையில் கதிரவன் கண் சிமிட்ட,
குயில்கள் கயலு.. கயலு.. என்று கெஞ்ச கண்விழித்தேன்.
வர்ணஜாலம் கொண்ட மேகங்களுக்கு இடையே எழுந்தருளியிருக்கும் கதிரவனுக்கு ஒரு காலை வணக்கத்தை போட்டு விட்டு திரும்பினேன். இறைவன் அருளால் எழில் கொஞ்சும் அழகில் இயற்கை என்னை ஈர்க்க செய்தது. அதனால் எழுந்து என் வீட்டு தோட்டதின் கடைசி பகுதிக்கு சென்றேன். வயலில் பச்சியிளம் பயிர்கள் இளங்காலை தென்றலில் தவழ்வதை கண்டு என் கால்கள் என்னையறியாமல் நடந்தது....

இயற்கையின் ரசிகையாகிய நான் ஒரு மரத்தில் தூக்கணாங்குருவிகள் தூளிகட்டி ஆடிக் கொண்டு இருந்ததை கண்டேன். எனக்கு ஒரு பழக்கம் இருக்கின்றது. எந்த பொருளாக இருந்தாலும், உயிரினமாக இருந்தாலும், அது மரமோ அல்லது வேறு எதுவாக இருந்தாலும் அதில் இருக்கும் சிறப்பினை ஆராய்ந்து பாராட்டுவேன். அன்றோ மரத்தின் சிறப்பினை சிந்தித்து பார்த்து கொண்டு இருந்தேன்.

அட டா! “இத்தனை சிறப்பு உன்னிடம் உள்ளதா?” என்று வியந்தேன்.

ஆம் அழகான காலை பொழுதில் ஆயிரம் அர்த்தங்களை அள்ளித் தந்த மரம், என்னையே உணர செய்தது. என் அன்னை கூட கற்றுத்தராத பாடம், என் ஆசான் கூட கற்றுத்தராத பாடத்தை ஒரு மரத்திடம் கற்று உணர்ந்தேன்.

பாடம் - 1

மரத்திற்கு எத்தனை அறிவு ? என்று அறியேன்! ஆனால் மனிதனை விட குறைவே. “தேடலே வாழ்க்கை” என்பதன் பொருளுக்கு ஏற்றவாரு தன் வாழ்க்கை வாழ்கின்றது மரம்.

ஆனால் மனிதன் மரதிடமிருந்து கற்று கொள்ள ஏராளம்.. ஏராளம்... உள்ளது.

மரம் தன்னை தானே காப்பாற்றி கொள்ளும் திறமை வாய்ந்தது. மரத்தின் வேர் தனக்கு தேவையான நீரை தேடி.. தேடி.. சென்று கொண்டே இருக்கும். எத்தனை தடைகள் வந்தாலும், பாறை, கல்இடுக்கு, மணல், களிமண் எதுவாக இருந்தாலும் தன் தேடலை நிறுத்தாமல் வேர் ஆனது தனக்கு தேவையான சக்தியை தேடி பெற்று கொள்ளும்.

ஆம் மரத்திற்கு! கண் இல்லை, கை இல்லை, கால் இல்லை ஆனாலும் தன் தேடலை தொடர்ந்து...... தொடரும் மரம்.

ஆனால் மனிதன்? மனிதனுக்கு கை, கால், கண், மூளை, பகுத்தரியும் திறன் இவை அனைத்தும் இருந்தும் தனக்கு தேவையான தேடலை தேடுவதில்லை. காசு பணம், மண், பெண், பொருள்,வீடு வசதி போன்ற ஆடம்பரத்தை மட்டும் தேடி.. தேடி.. அலைவது வாழ்க்கை அல்ல. உன்னை தேடு..

நீ யார்?

உன் பிறப்பின் காரணம் என்ன?

நீ என்ன செய்தாய்?

நீ என்ன செய்ய போகிறாய்?

உன்னிடம் என்ன திறமை இருக்கின்றது?

உன்னிடம் என்ன இல்லை?

தேடி அறிந்து இல்லாததை வளர்த்து கொள்ளுங்கள்.

“புறத்தின் நலத்திற்காக அலைந்தது போதும்
அகத்திற்கும் கொஞ்சம் அழகு சேர்”

அழியும் உடலுக்கு ஆடம்பரத்தை தேடியே ஆயுள் காலத்தை வீண் அடிக்காதே. உள்ஞானத்தையும் வளர்த்து முழுமையான வாழ்க்கையை வாழ கற்று கொள்.

பாடம் - 2

மரம் தன்னுடைய காய், கனி, பூ, நிழல் மற்றும் அனைத்தையும் மனிதனுக்கும், பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் எந்த சாதி, மதம், இனம் போன்ற எந்த வேறுபாடுகளும் இன்றி அனைவருக்கும் அளிக்கின்றது.

ஆனால் பகுத்தறியும் திறன் இருந்தும் மனிதன்?

எத்தனை சாதி, எத்தனை மதம், எத்தனை ஏற்ற தாழ்வுகள், எத்தனை... எத்தனை... வேறுபாடுகள்.

இறைவனின் படைப்பில் வேறுபாடுகள் இல்லை. மனிதனின் மனதில் தான் உள்ளது. மரத்தை விட சிறந்து எப்போழுது வாழ போகிறாய் மனிதா?

“மரத்திற்குள் இருக்கும் மனித தன்மை
மனிதனுக்குள் மறத்து போனது ஏன்?”

அனைத்து ஜிவராசிகலையும் சமமாக பார்க்கும் பக்குவத்தை மரத்திடம் கண்டு வியந்தேன் ஆனால் மனிதன் மனிதனையே சமமாக பார்ப்பதில்லையே.

பாடம் - 3

மரம் பனி, காற்று, புயல், சூராவளி, கடும் வெயில், வெள்ளம் எத்தனை சோதனைகள் வந்தாலும். மனிதனால் வெட்ட-பட்டாலும் மீண்டும்... மீண்டும்...... எழுந்து துளிர் விடும்.

“மரமே வாழ மல்லுக்கு நிற்கும் போது மனிதா நீ ஏன்?”

இப்படி மரத்திடம் இருந்து தயாள தாய்மை குணம், வேற்றுமையின்றி அள்ளி தரும் ஈகை, விடாது....விடாது....முயர்ச்சிக்கு தன்மை, வாழ்வின் தேடல் போன்றவற்றை கற்று கொண்டேன்.
கயல்! என்று என் அப்பாவின் அழைப்பு குரல் கேட்டு சிந்தனையில் இருந்து கலைந்தேன். ”இதோ வருகின்றேன் பா” என்று கூறிவிட்டு அந்த மரத்தை கட்டி தழுவி நீ என்னை விட பல மடங்கு சிறந்து உன் வாழ்க்கை வாழுகின்றாய்! எனக்கும் வாழ கற்று தந்ததர்க்கு நன்றி! நன்றி!! நன்றி!!! என கூறிவிட்டு மனநிறைவுடன் வீடு திரும்பினேன்

இப்படிக்கு
கயலின் கதை காற்றோடு கலப்பதற்கு அல்ல!
மனிதனின் மனதோடு விதைப்பதற்கு !!

எழுதியவர் : kayal (14-Oct-18, 11:26 am)
சேர்த்தது : கயல்
பார்வை : 695

மேலே