பாலியல் குற்றச்சாட்டு
காவல் நிலையம்
@@@@@@@@@@@
@@@@@@@@@@@
அய்யா வணக்குமுங்க.
எதுக்குய்யா ரண்டு பேரும் தள்ளாத வயிசில இருக்கிற இந்தப் பாட்டியப் புடிச்சு தூக்கிட்டு வர்றீங்க.
அய்யா, இவுங்க எங்க கொள்ளுப் பாட்டி. இன்னைக்குத் தான் ஒரு உண்மையச் சொன்னாங்க. அதான் இங்க புகார் குடுக்க அழைச்சிட்டு வந்தோமுங்க.
இந்த தள்ளாத வயிசில உனக்கு என்ன பாட்டி காவல் நிலையத்தில புகார் குடுக்கற அளவுக்குப் பிரச்சனை?
சரி. சரி. தலமை காவலர்கிட்டப் போயி உன் புகாரச் சொல்லு.
(நடுநடுங்கும் குரலில் பாட்டி பேசுகிறார்)
வணக்குமுங்க அய்யா. எம் பேரு காத்தாயி. எனக்கு வயசு எண்பது. எனக்கு பத்து வயசு நடக்கிறபோது எங்க பக்கத்து வீட்டுல இருந்த இருபது வயசு முத்தையா என்பவர் பல தடவை பாலியில் தொந்தரவு குடுத்தாருங்க. அந்த நபர் இன்னும் கொழுக்கட்டை மாதிரி நல்லாத்தான் இருக்கறாருங்க. நீங்க எம் புகாரைப் பதிவு பண்ணி அவரு மேல சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்ணுங்க.
ஏம் பாட்டி, எழுபது வருசத்துக்கு முன்னாடி நடந்த குற்றத்துக்கு இப்ப நடவடிக்கை எடுக்கச் சொல்லறியே.
பதினஞ்சு வருசம் இருபத்தஞ்சு வருசத்துக்கு முன்னாடி நடந்ததா சொல்லப்படற பாலியல் குற்றச்சாட்டுக்களப் பத்தி நேத்துத்தான் தொலைக்காட்சி செய்தில பாத்தனுங்க. அதனால புகார் குடுக்க வந்தேனுங்க.
சரி உம் புகாருக்கு சாட்சி இருக்குதா?
இருக்குதுங்க. எங்க பின்னாடி வீட்டு பாவாயி அக்காவுக்கு இந்த விசயம் தெரியுமுங்க. அவுங்களால நடக்க முடியாதுங்க.நாங்க எப்பிடியாவது வழக்கு விசாரணைக்கு வர்றபோது அவுங்களச் சாட்சி சொல்ல அழைச்சிட்டு வர்றோம்.
சரி. சரி. நீ கைநாட்டா கையெழுத்தா?
நான் படிக்காதவளுங்க.
சரி. இங்க உங் கைரேகையைப் பதிவு பண்ணு. நல்லா விசாரிச்சிட்டு அந்த கொழுக்கட்டை முத்தையாக் கெழவனை விசாரிக்க விதத்தில விசாரிச்சு உண்மையைக் கக்க வைக்கிறோம்.
நீங்க மகராசனா இருக்கணும் சாமி.