சவூதி வாழ்க்கை

சவூதி வாழ்க்கை..


பொதுவாக சொல்லப் போனால் என்னுடைய இளமை காலங்களை நான் பிரித்தானியாவில் கழித்தவன், பொழுது போக்குகள் அதிகம் கடந்துவிடாத எனது வாழ்க்கையில் வேலை மட்டுமே எனது குறிக்கோள்.
வேலை நிமிர்த்தம் நான் அதிகம் இடங்களுக்கு பயணிக்கா விடினும் சில முக்கிய இடங்களுக்கு பயணித்தவன்.
மிக அதிகமாக மனித நேயத்தை பின்பற்றுகின்ற அந்த நாட்டில் சில மனிதாபிமானமற்ற விடயங்களையும் கண் முன்னாள் பார்த்தவன்.

பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் என்னுள் ஆணிவேராய் இருந்த ஒரு விடயம் மத்திய கிழக்கில் அதுவும் சவூதி அராபியாவில் சில காலம் தொழில்நிமித்தம் போக வேண்டும் என்பதுதான். 19 வயதில் ஆரம்பித்த பிரித்தானியா பயணம் சுமார் 8.5 வருடங்களுக்கு பிறகு பூர்த்தியானது.


ஆனால் மத்திய கிழக்கில் பனி செய்ய வேண்டும் என்றால் மேட்படிப்பு சில படிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஆகையால் எனக்கு என்னவென்று தெரியாத ஒரு படிப்பை படிக்க நண்பர்களும் குடும்பமும் உட்சாகமூட்ட தொடங்கியது படிப்பு. திருமணமான பிறகும் இருவரும் படிக்கிறார்கள் என்று சிலர் வசைபாட பிள்ளை தூக்கும் வயதில் புத்தகம் தூங்குகிறான் என்றும் சிலர் என் முன் வாழ்த்து பாடினார்.

இது இவ்வாறு இருக்க ஒரு வருடத்திற்கு பிறகு முடிவு வந்தது மூன்று மெரிட் உடன் 1 பாஸ் 1 fail என்ற எனது முடிவும் 1st கிளாஸ் என்று மனைவியின் முடிவும் வந்தது. அடுத்த பரீட்சையில் அந்த 1 fail பாசாய் போனது. இருவரின் படிப்பும் வித்தியாசமான பிரிவுகளை கொண்டது.

இதட்கு இடையில் ஒரு கட்டுமான கம்பெனி இல் வேலையும் கிடைத்தது. நல்ல சம்பளம் என்று சொல்லா விடினும் நல்ல வேலை நல்ல மரியாதை . நல்ல அனுபவம் என்று எல்லாம் நல்லதாய் கிடைத்தது. ஒரு மாதிரியாக எல்லா வேலைகளையும் எனது சீனியர் எனக்கு கற்று தந்தார். ENG முரளி என்ற எங்களது பொறியியலாளரும் அதிக விடயங்களை கலந்துரையாடல் மூலம் கற்றுத்தந்தார். சிலருக்கு சில விடயங்களில் அதிஷ்டம் அடிப்பதுபோல் எனக்கும் நல்ல மனிதர்கள் சிலர் கிடைத்தனர் வேலையில்.

இது இவ்வாறு இருக்க எனது நண்பர் ஒருவர் மூலமாக சவுதி வேலையும் வந்து சேர்ந்தது. கத்தார் வேலை ஒரு வீதம் கூட ஆசை இல்லாததால் நான் அங்கு போவதை நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஆனால் கத்தார் இல் தான் எனது நண்பர்கள் 50% அதிகமானவர்கள் உள்ளனர் என்பது வேறு விடயம்.


சவுதியில் ஒரு நல்ல வேலை கிடைத்தது. புனித மக்கா நகருக்கு அருகில் என்பதால் எனக்கு எல்லாம் நல்லதாய் நடக்கும் என்ற நம்பிக்கையும் உருவானது. ஆதலால் நான் சவூதி நோக்கி பயணித்தேன். ஒருவர் மட்டும் என்னிடம் போகாதே என்று சொன்னது இன்றும் நினைவில் உள்ளது அவர் முரளி சார்.

பெரிதாக நாட்கள் போகும் முன்பே எல்லா விடயங்களும் மாற்றமாய் தெரிந்தன. மனிதாபிமானம் என்பது என்ன வென்று அங்கு யாருக்கும் தெரியவில்லை, வேலையில் எல்லோரும் பொடுபோக்காக இருந்தார்கள், நம்பிக்கை நாணயம் அங்கு இல்லை. விசுவாசம் முதலாளிக்கு கண் முன்னாள் மட்டும் காட்டப்பட்டது. தெரியாது என்ற பெயரில் அதிகமான களவுகள், அரபிக்கு அடிபணித்தல் என்பன என்னுடைய மனதை அதிகம் வதைத்தது. முடியாது என்ற சொல்லை அங்கு அரபியை தவிர யாரும் கூற நான் கேட்டது இல்லை. ஒரு அடிமை வாழ்க்கையை வாழ்வது போல இருந்தது எனக்கு. சவூதி யின் அழுக்குகளை நான் உணர்தேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால் ஒரு ஆறுதலாக உம்ரா என்று அழைக்கப்படும் ஒரு கிரிகை மட்டும் இருந்தது. மாதத்துக்கு இரண்டு முறை என்று எனக்கு உம்ரா நிறைவேற்ற கிடைத்தது. ஆனால் அங்கும் பல விதிமுறைகள் மீறப்பட்டன. சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இருந்தன. சில விடயங்கள் மனதை அதிகம் புண்பட வைத்தன. எது எவ்வாறு இருந்தாலும் அந்த சவூதி தனது பண திமிரை காட்டி கொண்டுதான் இருந்தது.

எனக்கு என் மீது ஒரு வருத்தம் இருந்தது, நான் நம்பிய இந்த சவூதி இது அல்ல எனக்கு பெரும் துரோகம் என்னால் இழக்கப்பட்டு விட்டது என்று. தொலைபேசி மூலம் மற்றும் நேரடியாக சந்திக்கும் அனைவரிடமும் நான் இந்த விடயத்தை அறிவித்தேன். சவூதி நல்ல விதமாக நமக்கு அறிவிக்கப்பட்ட மோசமான ஒரு இடம், ஆனால் நமது புனித பிரதேசம் அங்குதான் இருக்கிறது. பெருமானாரின் பிராத்தனை மட்டும் அந்த பகுதிக்கு கிடைக்காமல் விட்டுருந்தால் இறைவன் என்றோ இந்த பிரதேசத்தை அழித்திருப்பான் என்று .

சில காலத்திற்கு பிறகு சிலரின் அயராத முயட்சியால் எனக்கு வேலை பறி போனது. நீங்கள் விடுமுறையில் இருந்த போதும் இங்கு வேலையில் மாற்றம் இல்லை ஆகையால் உங்களின் கண்காணிப்பு தேவைப்படாது. எமது நிறுவனம் பெரிய அளவில் வேலை செய்யும் போது கட்டாயம் உங்கள் உதவி தேவைப்படும் இப்போதைக்கு உங்களுக்கு டிரைவர் வேலை உண்டு முடிந்தால் தொடருங்கள். இல்லாவிடின் உங்களுக்கு எக்ஸிட் அடித்து தருகிறேன். மேலாளரின் வார்த்தைகள்.

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களுடன் பேசி ஒரு முடிவு கிட்டியது, எக்ஸிட். ஊருக்கு போவதட்குரிய வேலைகளை செய்த போது கத்தார் இல் இருந்து ஒரு நண்பர் தொலைபேசி எடுத்தான் . எனது பெயரை ஒத்த ஒருவன் அவருடன் பேசியதாகவும் விசா எடுத்து தருகிறேன் வா என்றான். ரூம் உம் சும்மாதான் கிடக்கு வாரியா ? என்றான் . 3 நாளில் விசா வர அன்று பின்னேரம் எக்ஸிட் அடிக்க வேறு ஒருவன் நைட் டிக்கெட் போட அவன் வாங்கி தந்த 2 அல் பைக் பார்சல் உடன் நான் ஒரு வீதம் கூட விரும்பாத கத்தார் நாட்டுக்கு வந்து இறங்கியது விமானம்.

மூன்று நாட்கள் அராபிய தீபகட்பத்தில் விருந்தினர்கள் இலவசமாக தங்க அனுமதிக்கப்பட்டர்கள் 1400 வருடங்களுக்கு முன் என்று வாசித்து இருக்கிரேன் ஆனான் நான் 3 மாதம் தங்கிய பிறகுதான் இந்த தீபகட்பத்தில் வேலை எடுத்தேன். இரண்டு வருடம் முடிய இரண்டு மாதம் இருக்கிறது இதுவரை நன்றாகத்தான் போகிறது என்னை பொறுத்தமட்டில் சவூதி யை விட கத்தார் 10 மடங்கு நல்லம்.

தயவுசெய்து கத்தார் நல்லம் என்று நான் சொல்வதாக நினைக்க வேண்டாம்
சவூதி யை விட கத்தார் 10 மடங்கு நல்லம் அவ்வளவுதான் . நல்லது, கெட்டது என்று நாம் நினைப்பது நமக்கு நன்மையா இல்லையா என்பதை நமது இறைவன்தான் நன்கறிந்தவன்.

எழுதியவர் : மபாஸ் பரீட் (15-Oct-18, 1:35 pm)
சேர்த்தது : மபாஸ் பரீட்
பார்வை : 188

மேலே