திருப்பதியின் திருப்பம்

ஒரு கிரமத்தில் வாழும் இளம் பெண் ஒருத்தி சிவ பெருமானையே தன் முன்மாதிரியாக வைத்து வாழ்பவள்.அவள் பெயர் பானுமதி. உலகில் படைக்கப் பட்ட உயிரினங்கள் அனைத்தையும் சமமாகப் பார்க்கும் குணம் உடையவள். மனிதர்களிடம் காட்டும் அன்பைப் போலவே மிருகங்களிடமும் பறவைகளிடமும் அன்பு பாராட்டுவாள். வாசலில் நிற்கும் வாட்சுமேனாக இருந்தாலும் கம்பேனியின் யம்டியாக(M.D) இருந்தாலும் சமமான மரியாதையையே இருவருக்கும் கொடுப்பாள். அவரவர் செய்யும் தொழிலை வைத்து மதிப்பது அவளுக்குப் பிடிக்காது. அனைவரையும் மனிதராக மட்டும் பார்த்துப் பழகும் குணம் கொண்டவள்.

பானுமதி ஏழரைச் சனி நடப்பதால் திருப்பதி சென்று வர வேண்டும் என்று நினைத்தாள்.அவளின் தோழி ‘சக்தி’.சென்னையில் மகளிர் விடுதியில் தங்கி பணியாற்றி வருகிறாள்.பானு சென்னை சென்று தன் தோழியையும் அழைத்துக் கொண்டு திருப்பதி போகலாம் என்று முடிவு செய்து சக்திக்குக் போன் செய்தாள்.

ஹலோ! ” சக்தி நான் பானு பேசுரேன்டி, எப்படி இருக்க?”

“இப்பத்தா மேடம்க்கு என்னோட நியாபகம் வந்துச்சா? அதிசயமா கால் பண்ணியிருக்க சொல்லுடி என்ன விஷயம்? “

“இல்லடி கொஞ்சம் வேலை அதிகம் அதான் கால் பண்ணிப் பேச முடியவில்லை. எனக்குத் திருப்பதி போகவேண்டும் போல இருக்குடி,அதா நீ ஃபிரினா நாம போய்விட்டு வரலாம்.”

“ம்ம்....சரி டி! இந்த வீக்கெண்டு வா போய்விட்டு வரலாம். வெள்ளிக் கிழமை இரவே வந்துவிடு, நாம சனிக் கிழமை காலையிலே போகலாம்”.

“சரி டி, நான் அப்போ வெள்ளிக் கிழமை உன்ன நேரிலே சந்திக்கின்றேன். பாய் சக்தி!”.

இரண்டு நாளைக்கு அப்புறம் பானு சென்னைக்கு புறப்பட்டுச் சென்றாள்.

சக்தி : “வா...டி; ரயிலில் சீட்டு கிடைச்சுதா? “

பானுமதி : “ஒரு பிரச்சனையும் இல்ல சீட்டு கிடைத்தது. நீ எப்பிடி இருக்க?”

சக்தி : எனக்கு என்ன ? ஒரு அலுவலகத்தைக் கட்டி அழர. ஏதோ போகிறது. வீட்டில் எல்லோரும் எப்பிடி இருக்கிறார்கள்?

பானுமதி : “ம்ம்....நல்லா இருக்கிறார்கள்.

சக்தி : சரி பானு ரெப்ஃபரஷ் ஆகிட்டுவா சாப்பிடலாம்.

இருவரும் சாப்பிட்டு முடித்து வெகு நேரம் பேசிக் கொண்டு இருந்தனர்.வெகு நாட்களுக்கு அப்புறம் சந்திப்பதால் பேச வேண்டியதை எல்லாம் பேசி தீர்த்தனர்.

காலையில் இருவரும் ஏழு மணி ரயிலுக்குக் கிளம்பினர்.

“வா டி சீக்கிரம். நேரம் ஆகிறது சென்னையில் போக்குவரத்து நெரிசல் வேறு அதிகம். ரயிலை விட்டுடாம போய் பிடிக்க வேண்டும்.”

“இதோ வந்துட்ட டி போகலாம். “
ஆட்டோ பிடித்து இருவரும் ரயில் நிலையத்திற்கு வந்தனர்.நீ இங்கேயே நில்லு நான் போய் டிக்கட் எடுத்து வருகின்றேன் என்று கூறி சக்தி சென்றாள்.

பானு நின்று கொண்டு இருக்கும் போது தீடீரென்று ஒரு குரல் “ஹலோ மேடம்! இங்க என்ன பண்ணுரீங்க?”,எங்கயோ கேட்ட குரல் மாதிரியே இருக்கிறதே என்று யோசித்தவாறு திரும்ப அருகில் அவளுடன் கல்லூரியில் கூட பயின்ற மகேஷ் நின்றான். அவளின் நண்பன். டேய் ........நீ எங்கடா இங்க ? எப்பிடி இருக்க? உன்ன பார்த்து எத்தன வருடம் ஆகிறது.

மகேஷ் : “நல்லா இருக்க. இங்க எதற்கு நிற்கின்றாய். எங்க போர?

பானு: நானும் சக்தியும் திருப்பதி போகிறோம். அவ டிக்கட் வாங்கப் போயிருக்கா.அதான் இங்க நிற்கின்றேன்.
மகேஷ் : “அட! தனியா போகனுமே னு வந்த நல்ல வேளையா உங்களைப் பார்த்த. நானும் திருப்பதிதான் போர.”
அப்படியா அருமைடா!.

சக்தியும் வந்தாள். மகேஷு.....! எப்படி இருக்க? என்ன பன்னுர இப்போது?

மகேஷ்: ம்ம்..........நல்லா இருக்கச் சக்தி. ஒடிசாவில் தா வேலை பார்க்குர. இப்போது விடுமுறைல வந்த. நீ எப்படி இருக்க?

சக்தி: ம்ம்.......... நலம்.

சக்தி இவனும் திருப்பதிதான் போரான். அப்படியா அப்போது எங்களுக்குப் பாதுகாப்புக்கு ஆள் கிடைச்சாச்சி.

ரயில் வந்ததும் மூவரும் ஏரி சென்றனர். இரண்டரை நாழிகையில் திருப்பதி சென்றடைந்தனர்.

பானு: “பரவாயில்லை சக்தி இன்றைக்கு கோயில கூட்டம் குறைவாகவே உள்ளது”.

மூவரும் சாமி தரிசனத்திற்காக வரிசையில் நின்றனர். சீக்கிரமாகவே நல்ல தரிசனம் கிடைத்தது. மூவரும் தரிசனம் முடித்து கோயில் வெளி பிராகாரம் சுற்றி வந்தனர். வழியில் தீடிர் என்று ஒரு பெரியவர் தாடியெல்லாம் நரைத்துப் போய் முதுமையின் முழுமையில் இருந்தார் அவர் பானுவின் காலை தடுத்து அம்மா ரொம்ப பசிக்கின்றது என்று கூறினார்.

பானுவுக்கு ஏற்கனவே இறக்கக் குணம் அதிகம். இதில் முதியவர் என்றால் சொல்லவா வேண்டும். பானு அட கடவுளே உன் சன்னிதானத்திலும் பசியோடு ஒருவரா என்று மனதிற்குள்ளேயே நினைத்துக் கொண்டு அவரை பார்த்தாள். தன் பையிலிருந்த புளியோதரையை எடுத்து “ஐயா! இதைச் சாப்பிடுங்கள்” என்று கூறி அன்போடு அதை அவருக்குக் கொடுத்தாள். கையிலிருந்த தண்ணீர் பாட்டிலையும் கொடுத்து விட்டு “ஐயா நான் ஒன்று கூறவா?”. நீங்கள் இனிமே பிச்சை எடுகாதிர்கள். நாளை முதல் முதலாளியாகவே எண்ணிடம் ஒரு யோசனை உள்ளது.

இருக்கை நீட்டி யாசகம் கேட்க வேண்டாம் இருக்கை கொண்டு உழைத்து வாழ வழி ஒன்று உள்ளது. துளசி செடியை இங்கு வரும் பக்தர்களிடம் விற்றால்! உங்கள் நிலையும் மாறும். இங்கு வரும் பக்தர்களும் ஏழுமலையானிடம் துன்பம் விடுத்து கடன் பிரச்சனை தீர வேண்டும் செல்வம் செழிக்கவே வேண்டி வருவர்.

அப்படி வருபவர் செல்லும் போது இந்த துளசி சேடியை வாங்கி சென்று துளசி மாடம் வைத்து பூஞ்தால் செல்வ பாக்கியம் பெறுவர்.இறைவன் அருள் கிடைத்தாக என்னுவர்.ஒரு செடி பதினொன்று ரூபாய் என்று விற்பனை செய்யுங்கள் பத்து ரூபாய் நீங்கள் எடுத்துக் கொல்லுங்கள் ஒரு ரூபாயைப் பெருமாளுக்கு சார்த்தி விடுங்கள். அருள் அவனுடையதாயிற்றே, செடி தானே உங்களுடையது. அதனால் ஒவ்வோர் செடியிலும் வரும் ஒரு ரூபாயை உண்டியலில் சேர்த்து விடுங்கள்.

பையிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்து அதில்

“இந்த துளசி செடியை உங்கள் துளசி மாடத்தில் வையுங்கள்.
பெருமாளின் அருளை பெறுங்கள்.

சளி, இருமல், வறட்டு இருமல் போன்றவற்றிற்கு மருந்தாகும்.
தொற்றுநோய்களை எதிர்க்கும்.( கிருமி நாசினி)
சீரண சக்தியை அதிகரித்து பசியை அதிகரிக்கும்.
வயிற்றுப் பொருமலைத் தணிக்கும்.
துளசி விதை ஆண்மையை அதிகரிக்கும்.
ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

வெண் தோல், ஆஸ்துமா, மூச்சிரைப்பு, இடுப்புப்பிடிப்பு, சிறுநீரகப் பிரச்சினைகள் போன்றவற்றுக்கும் மருந்தாகும்.
லட்சுமி கடாட்சம் பெருகட்டும்.”

என்று எழுதிக் கொடுத்தாள்.ஐயா இதை ஒரு போர்டுல வைத்துவிடுங்கள்.துளசி செடிகள் சட்டென்று விற்று விடும்.

இதைக் கேட்ட பெரியவர் ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்தார். அவர் மனதில் கடவுளே வந்து கூறியது போல் ஒரு பிரமிப்பு. இனி நான் அப்படியே செய்கின்றேன் அம்மா! அதுமட்டுமல்ல நீங்கள் இங்கு எங்கு பிச்சையெடுபவரை பார்த்தாலும் இதைச் செயல்படுத்துங்கள்.இந்த கோயிலில் இனி நான் பிச்சையெடுப்பவரைப் பார்க்கவே கூடாது.
அந்த பெரியவர் புன்னகையுடன் இது கடவுள் நமக்கு இட்ட பணியென்று மனதில் நினைத்துக் கொண்டு பானுவிடம் மிக்க நல்ல யோசனை அம்மா.இந்த சிறுவயதில் உன்னிடம் எத்தகைய ஞானம். என் மனம் நிறைந்து விட்டது.நீ நல்லா இருக்கனுமா.

அம்மா நீங்கள் எங்கு வசிகிர்கள் நான் மறுபடியும் உங்களை எங்கு எப்படி பார்ப்பது.ஐயா என்னைப் பார்க்க முடியாது நான் தொலைவில் இருந்து வருகின்றேன்.அதனால் உங்களால் என்னைச் சந்திக்க இயலாது.
அம்மா நான் உங்களை பின் எப்படி தொடர்பு கொள்வது.நீங்கள் சொல்லும் மாற்றத்தை நான் செயல்படுத்திவிட்டு அதை உங்களிடம் தெரிவிக்க வேண்டுமே.

அவளும் யோசித்து பெரியவர்தானே அவர்க்கும் நம்பிக்கை பிறக்க வேண்டுமேன நினைத்து தன் தொலைப்பேசி எண்ணை எழுதிக் கொடுத்தாள்

மகேஷ் திட்டினான். என்ன பன்னுர முன்ன பின்ன தெரியாதவங்கிட்ட எதற்கு நம்பர்லாம் கொடுக்குர. இல்லடா; இவங்கலாம் தப்பா எதும் யோசிக்க மாட்டார்கள். எதுமே இல்லாமல் இருக்குரவங்க தா நேர்மையா இருப்பார்கள். நான் நல்லதே நினைகுர நல்லதே நடக்குமென நம்புர அதனால எதுவும் தப்பா நடக்காது.

சக்தி; இவ மாறவே மாட்டா இந்த உலகம் எங்கேயோ போயிடுச்சு இவ மட்டும் இன்னும் ஏமாளியாகவே இருக்கா.
பிச்சகாரங்களாம் பேங்கல அக்கவுன்ட் வச்சி பணம் சேத்து வைக்குர காலம் டி.அவங்கலா உழைக்காமல் எளிய வழியில் சம்பாதிக்கவேண்டும் னு நினைக்குரவங்க டி லூசு....

இதுல புளியோதரையை வேர அப்படியே தூக்கி கூட்டுத்துட்டு வரா. இல்ல சக்தி அவர் பசி னு கேக்குராரு;நான் சாப்பாடு வச்சிகிட்டே எப்படி சும்மா வரது எனக்குப் பசியில்லை அதா அவருக்கு கொடுத்தேன்.

அந்த பெரியவரும் இதலாம் கேட்டுக் கொண்டு இருந்தார்.மூவரும் அங்கு இருந்து வெளியேறி ரயில் பிடித்து வீடு திரும்பினர்.பானுவும் தன் வீடு திரும்பினால்.மறுபடியும் தன் கடமையில் மூழ்கினால் .தன் குடும்பத்தைப் பார்த்துக் கொள்வதும் தன் வயதான தந்தைக்கு உதவுவதுமாக அவள் காலம் ஓடியது. சில வருடம் கழித்து ஒரு தெரியாத எண்ணிலிருந்து பானுவின் கைப்பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது.

பானு கைப்பேசியைக் கையில் எடுத்து ஹலோ! யார் பேசுவது? அம்மா,நான் வெங்கடராமன் பேசுகின்றேன் என்று ஒரு குரல்.
யாரா இருக்கும்? இந்த பெயரில் நமக்கு யாரையும் தெரியாதே !

என்று குழப்பத்தில் அவள் பதில் கேள்வி கேட்டாள் நீங்கள் யார்?எனக்குத் தெரியவில்லையே ;
“நான் தான் மா நீ ஒரு முறை துளசி செடி விர்க்க யோசனை கொடுத்தியேமா அந்த பிச்சகார கிழவன் தான் பேசுகின்றேன்.

அஹா! சொல்லுங்கள் ஐயா, எப்படி இருக்கிங்க?

நான் சொன்னது உங்களுக்கு பயனளித்தா?என்று கேட்டாள்.

அவர் புன்னகைத்தார் அம்மா நீ கூறிய வழியை நான் மட்டுமல்ல இங்கு இருந்த அனைத்து பிச்சை எடுப்பவரிடமும் கூறி அனைவரையும் முதலாளி ஆக்கி விட்டேன்.இப்பொழுது திருப்பதி தேவஸ்தானத்தில் பிச்சையேடுபவரே இல்லை. கோயில் விதியில் துளசி சேடி விற்பனை அதிகமாயிற்று.

இதற்கு எல்லாம் நீதான் மா காரணம் நான் உன்னை நேரில் பார்க்க வேண்டும். நீங்கள் எங்கு வசுக்கிற்கள் உன் விலாசம் வேண்டும் இதை நீ மறுக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டார்.

“ஐயா! நான் என்ன செய்தேன்? வேரும் ஆலோசனை தானே வழங்கினேன். அதை நிறைவேற்றியது நீங்களும் அந்த பெருமாளும் தானே.எனக்கு மிக்க மகிழ்ச்சி, என் பேச்சிற்கு நீங்கள் மதிப்பளித்து இதைச் செயல்படுத்தியதற்குக் கோடி நன்றி” என்று கூறினால்

ஆனால் அவர் விடுவதாக இல்லை எப்படியோ அவள் முகவரியைப் பெற்றுக் கொண்டார்.
பானு திருப்பதியில் இருந்து வந்த பிறகு அங்கு என்ன நடந்தது என்று கூற மறந்து விட்டேனே!,கேளுங்கள் வாசகர்களே!
பானுவுக்குத் தெரியாது அவள் உதவியது பிச்சைக்காரனுக்கு அல்ல அவர் ஒரு கோடிஸ்வரர் என்று. தினமும் கோயிலுக்கு மாறு வேடத்தில் வந்து பத்து நிமிடம் பிச்சையேடுபார். அது அவருக்குத் தான்....என்ற கர்வம் வரக் கூடாது, பெருமாள் தந்த பிச்சை தான் இந்த வாழ்க்கை இதை மறக்கக் கூடாது என்பதற்காக அவர் ஒரு வேண்டுதல் போல நெடு நாட்களாக செய்து வருகிறார்.

பானு கூறிய ஆலோசனை அவருக்கு என்றும் பெறாத மனநிறைவைத் தந்தது.இவ்வளவு நாளாக எனக்கு இது தோன்றவில்லையே என்று வேட்கினார்.
உலகிற்கெல்லாம் படி அளக்கும் ஏழுமலையான் திருக் கோயிலில் பிச்சையேடுபவர்களா! இருக்கக் கூடாது இங்கு அனைவரும் பெருமாளின் அருள் பெற்றவர் அல்லவா.இந்த கோயில் பிச்சையெடுப்பவர் இருந்தால் பெருமாளுக்கு அல்லவா இழுக்கு.

நாளை முதல் பானு சொன்னது போல் அனைத்து பிச்சை எடுப்பவரையும் முதலாளி ஆக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டவாறே வீடுதிரும்பினார் வேங்கட ராமன்.சில நாட்களுக்குப் பிறகு அதுபோலவே மாற்றத்தையும் உருவாக்கினார். இப்பொழுது திருப்பதி திருத்தலத்தில் பிச்சையேடுபவரே இல்லை.

இவ்வளவு பெரிய நன்மை செய்தது பானுவிற்கே தெரியாது.அது அவளது வாழ்க்கைக்கே ஒரு திருப்புமுனையாகப் போகின்றது என்பதை அரிய மாட்டால்.திடீரென்று ஒரு நாள் வேங்கடராமன் நேரில் பானுவின் வீட்டிற்கே வந்தார்,அவளுக்கு இவர் யார் என்றே தெரியவில்லை.

நடுத்தரமான ஐம்பது வயது நிரம்பிய பெரியவர் வாசலில் நின்று கொண்டு இருந்தார்.இவள் வெளுத்த தாடியுடன் தள்ளாடும் கிழவனாகத் தானே பார்த்து இருக்கிறாள் அதனால் பானுவால் அந்த பெரியவரை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை.

அம்மா பானு! “நான் தான் வேங்கட ராமன்”.இவளுக்கு எதுவும் புரியாமல் திக்கு முக்காடி நின்றால்.”நீ பிச்சையளித்த முதிய கிழவன்” என்றார்.

பானு ஆச்சரியத்தில் திகைத்தாள்! நீங்கள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாற்றம் அடைந்து விட்டீர்கள். அவர் புன்னகைத்தார் ஐயா வாருங்கள் உங்களை இப்படி பார்த்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி என்று உள்ளழைத்து உபசரித்தாள் ,உணவு சமைத்துப் பரிமாறினால். அவர் அங்கு ஒரு நாள் முழுவதும் தங்கி இருந்ததால் அவளின் சூழ் நிலையைப் புரிந்து கொண்டார். முப்பது வயது நிரம்பியும் திருமணம் செய்ய முடியாமல் இருக்கும் அவளின் நிலை,முதிய வயதடைந்த தந்தை, இரு தம்பி ஒரு தங்கை. இன்னும் வாழ்வில் தக்க நிலையை அடையமுடியாமல் திண்டாடிக் கொண்டு இருக்கும் அவள் சூழலைப் பார்த்தார்.

அம்மா நான் பிச்சைக்காரன் இல்லை அங்குத் தினமும் வந்து 10 நிமிடம் மாறுவேடம் போட்டு பிச்சையேடுபேன்.ஏனென்றால் நான் செல்வந்தன்
என்ற கர்வம் எனக்கு வரக் கூடாது என்பதற்காக அப்படிச் செய்வது எனது வழக்கம்.

நீ அன்று கூறியதை சாச்சாத் அந்த பகவான் எனக்குகிட்ட கட்டளையாக நினைத்து முடித்தேன்.உன்னால் தான் எனக்கு மன நிறைவு கிடைத்தது.மனமும் மகிழ்ச்சியடைந்தது. இதற்குக் காரணமான உனக்கு நன்றிக் கடன் பட்டுள்ளேன். கடவுள் எனக்கு இன்னொரு பணியை அளித்துள்ளார் அதை நிறைவேற்றவே நான் இங்கு வந்துள்ளேன்.
என்ன ஐயா அது கூறுங்கள் நான் உங்களுக்கு ஏதேனும் உதவ வேண்டுமா?

ஆம் அம்மா,இந்த கிழவனுக்குச் செல்வத்திற்குக் குறையில்லை ஆனால் அதையாள வாரிசே இல்லை.எனக்கு உன்னைப் போல் ஒரு மகள் இருந்து அவளுக்குக் கல்யாணம் செய்து பார்க்க வேண்டும் என்று ஆசை.அதற்கு குடுபனையில்லை. அந்த ஆசையை உன்மூலம் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று நினைக்கின்றேன். என்னை உன் தந்தையாக ஏற்றுக் கொள்வாயா? என்று அவர் கேட்டார். அவள் கண்களில் நீர் தளும்பத் திகைத்துப் போய் நின்றால். இந்த திருமால் எப்படியெல்லாம் விளையாடுகிறார் என்று மனதில் நினைத்துக் கொண்டால். கடவுளின் சித்தம் இதுவென்றால் அது அப்படியே நடக்கட்டும் என்று கூறிவிட்டு பூஜை அறைக்கு ஓடினால்.

அவள் செல்லமாக மாமா என்றே திருமாலை அழைப்பால்.சிவபெருமானைத் தந்தையாகவும் பார்வதியம்மனை தாயாகவும் நினைத்து வாழ்பவள். அனைத்து தெய்வங்களையும் உறவுமுறை வைத்தே வணங்குவாள்.பூஜை அறைக்குள் வந்த பானு அங்கு இருந்த பெருமாளின் படத்திடம் சென்று
மாமா என்ன அவரிடம் கோத்துவிட்டு என்ன வச்சி எனக்கே தெரியாமல் ஏதேதோ செய்ய வச்சிற்கிங்க. எனக்கே திரும்ப உதவி செய்ய வச்சி அடடா..........! உங்கள் திருவிளையாடல் ம்ம்...........

பாரா மாமாக்கு இவ்வளவு பெரிய உலகத்தில் நமது மேலையும் அக்கரை அனுசரனையல்லாம் இருக்கிறது. உங்கள் அருளுக்கு நன்றி மாமா னு செல்லமா பெருமாள் படத்துக்குக் கில்லி முத்தம் கொடுத்தாள்.

வேங்கட ராமன் பெரியவரே பானுவின் முழு திருமண செலவையும் ஏற்றுச் சீர் அனைத்தையும் செய்து வைத்தார். அவள் குடும்பத்திற்கும் அடுத்த நிலைக்குச் செல்ல உதவினார்.
பானுவின் சுமையனைத்தும் நீங்கியது அவள் செய்த சிறிய உதவி பெரிய பலனை அவளுக்கு தக்க சமயத்தில் கொடுத்தது.

வீட்டுக்கொரு துளசிச் செடியை வளர்க்கலாம்.
இயற்கை மருத்துவத்தைப் பெறலாம்
பெருமாளின் அருளையும் பெறலாம்
----கயல்

எழுதியவர் : kayal (9-Oct-19, 11:10 pm)
சேர்த்தது : கயல்
பார்வை : 173

மேலே