செவப்பி - அத்தியாயம் 14

செவப்பி - அத்தியாயம் 14
=========================

ரகு மேல அப்பப்போ செவப்பி வந்து போற விஷயம் ஊருக்குள் மெல்ல பரவ ஆரம்பித்தது.

ப‌யந்து போயிருந்தார் பார்வதியம்மா..

'பலி வாங்கப் போற‌து என்னவோ செவப்பி.. ஆனா மாட்டினா தண்டனை வாங்கப்போறது ரகு.. இதப்பத்தி அவன் எதுவும் யோசிச்ச மாதிரியே தெரியலையே..'

'செவப்பிய லவ் பண்ணினான்.. அது முழுசா நிறைவேறல... அவளும் இப்ப இல்ல.. இப்பவும் அவன் அவளுக்காக இப்படி ஏடாகூடமா எதுனா பண்ணப்போயி, ஏதாவது சிக்கல்ல மாட்டினா.. அப்புறம் அவனோட‌ வாழ்க்கை...!?'

ரகு அந்நேரம் வரவும், அவன்கிட்டேயே கேட்டார்..

"ரகு.. ரூபா படிப்ப முடிச்சிட்டு, கல்யாணத்துக்கு நிக்கப் போறா.. நீ என்னடானா, உன்னோட காதலுக்காக இப்ப 'பலி வாங்கும் படலத்துல' இறங்கிட்ட.. கொஞ்சம் யோசிப்பா"

"நீ சொல்ற.. சரிமா... திரும்ப எங்கிட்ட செவப்பி பேசினானா... நான் உன்னோட கவலைய அவளுக்குச் சொல்றேன்"

"ஆனா ஒன்னுமா.. நான் இப்பவும் அவள‌ காதலிக்கிறேன்.. என்னிக்குமே அவளுக்கு மட்டும் தான் என் மனசுல இடமிருக்கு.."

"அதனால.. கல்யாணம் பண்ணு அது இதுனு பேசிட்டு என்கிட்ட வராத.. சரியா.."

'என்னடா இவன் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்கறான்.. எல்லா விஷயமும் சரியா போயிட்டு இருக்கு.. கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம்னா விடமாட்டான் போல இருக்கே..' என யோசித்த பார்வதியம்மா அடுத்த கட்ட வேலைக்காக கிச்சனுக்கு சென்றார்..

(தொடரும்)

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (9-Oct-19, 7:17 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 89

மேலே