காயாவும் அவள் கோபமும்
காயா, அவள்தான் வீட்டில் கடைசிப்பிள்ளை. அவள் இப்பொழுது மிகவும் கோபமாக இருக்கிறாள். காலையில் கனவு கண்டனீங்களா? என்று மிகவும் பயமுறுத்தும் குரலில் கேட்டார் அப்பா.
இல்லை, என்று சத்தமிட்டு கூறினாள் காயா. இல்லை, இல்லை இல்லை என்று கத்தினாள்.
வா இங்கே, காலை உணவு தயாராக இருக்கிறது என்றார் அம்மா. இல்லை எனக்கு வேண்டாம் என்றார் காயா.
இப்பொழுது காலை உணவு சாப்பிட வேண்டிய நேரம், என்றார் அம்மா மிகவும் கண்டிப்புடன்.
வேண்டாம்! என்று உரத்து அழுதார் காயா. எனக்கு காலைச்சாப்பாடு வேண்டாம், எனக்கு வேண்டாம்...
இப்பொழுது காயா இன்னும் கோபமாக இருந்தாள்., தனது பால் குவளையைத் தட்டிவிட்டாள்.
பால் முழுவதும் வழிந்து நிலத்தில் ஓடியது...
அப்பொழுது பூனை அங்கே வந்தது. அது பாலை நாவால் நக்கியது. நிலம் நன்றாக துடைக்கப்பட்டு விட்டது.
நான் நினைக்கிறேன் உனது சாப்பாட்டை சின்னப்பறவைகளுக்கு கொடுக்கலாம், என்று கூறிக்கொண்டே காயாவின் பாணில் ஒரு துண்டை வெட்டி ஒரு சிறிய தட்டில் வைத்து அதை சாளரத்திற்கு வெளியே வைத்தார் அம்மா.
அப்பொழுது அங்கு வந்த பல பறவைகள் அங்கே இருந்த பாண் துண்டுகள் முழுவதையும் கொதிக்கொத்தி சாப்பிட்டுவிட்டன.
உனக்கு இந்த பச்சைக்காய் ( cucumber)வேண்டுமா? என்று கேட்டார் அப்பா கூண்டிலிருந்த “சோனா” என்ற பச்சைக்கிளியிடம்.
ஆம் நன்றி, ஆம் நன்றி என்றது சோனா . உடனே காயாவின் காலை உணவாக இருந்த பச்சைக்காய் துண்டுகளை (cucumber) தனது சொண்டினால் கொத்தியது.
காயாவின் ஷ்ரோபரி சீம்பாலை (yogurt) நான் எடுத்துக்கொள்ள முடியுமா? என்று கேட்டான் அங்கு வந்த காயாவின் அண்ணா. அம்மா பதில் சொல்வதற்கு முதலே சீம்பாலை உறிஞ்சிக்குடிக்கத்தொடங்கினான்.
நான் ஜாம் பூசிய பாண்துண்டை எடுத்துக்கொள்கிறேன் என்றாள் காயாவின் அக்கா, பாடாசாலைக்கு புறப்பட்டுக்கொண்டே அதை எடுத்துக்கொண்டு வேகமாக ஓடினாள்.
நான் இப்பொழுது வெளிக்கிடாவிட்டால் தாமதமாகவே செல்லவேண்டியிருக்கும் என்று கூறிக்கொண்டே அவசர அவசரமாக வெளிக்கிட்டுக்கொண்டிருந்தார் அம்மா.
நான் உன்ன்னுடய ஆப்பிள் பழத்தை எடுத்துச்செல்கிறேன் என்று சொல்லி அதை எடுத்து தனது கைப்பைக்குள் வைத்துக்கொண்டே " நான் சென்று வருகிறேன் என்று கையசைத்தார் அம்மா.
இப்பொழுது காயாவும் அப்பாவும் மட்டுமே சாப்பாட்டு மேசையருகிலிருந்தார்கள்.
அப்பா பத்திரிக்கை படித்துக்கொண்டே காலை உணவையும் கோப்பியையும் சுவைத்துக்கொண்டிருந்தார்.
வீட்டுக்குள் அமைதி நிலவியது. பூனையும் அம்மாவின் கதிரையில் ஏறிப்படுத்துக்கொண்டு தனது உடலை நாவால் நக்கியது.
சோனாவும் மிகவும் அமைதியாக கூண்டிலுள்ள தனது தடியில் ஏறி இருந்து கொண்டு தனது பெரிய கண்ணை மூடி விளித்தது.
அப்பா….என்றாள் காயா. நான் இப்பொழுது கோபமின்றி இருக்கிறேன் எனக்கு பசிக்கிறது , நான் மிக மிக பசியாக இருக்கிறேன் என்றாள் காயா.
ஓ! பசிக்கிறதா? என்றார் அப்பா ஆச்சரியத்துடன்.
அப்படியானால் இப்பொழுது நான் உனக்கு சாப்பாடு பரிமாறுகின்றேன், உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டார் அப்பா.
எனக்கு காலை உணவு வேண்டும் என்றாள் காயா.
அப்பா காயாவுக்கு காலை உணவு தயார் செய்தார்.
முதல் ஒரு துண்டு பாணுக்கு அரைத்த இறைச்சி பூசி அத்துடன் ஆகுர்க் துண்டும் வைத்து சாப்பிட்டாள்.
இன்னுமொரு துண்டுக்கு ஜாம் பூசிச்சாப்பிட்டாள்.
பிறகு ஒரு வெள்ளரிக்காய் யோகுர்ட் சாப்பிட்டாள். கடைசியாக ஒரு குவளை பால் குடித்தாள், ஒரு துளி பால் கூட நிலத்தில் சிந்தாமால்!
இப்பொழுது அப்பாவும் காயாவும் சிறுவர் பாடசாலைக்கு புறப்பட்டுக்கொண்டிருந்தார்கள்.
காயாவின் பாடசாலைப்பைக்குள் ஒரு சாப்பாட்டுப்பெட்டியையும் ஒரு ஆப்பிள் பழத்தையும் வைத்தார் அப்பா.
அவர்கள் இருவரும் கதவைப்பூட்டி வெளியில் வந்த போது எலி ஒன்று தோட்டத்தில் ஒரு சிறு துண்டு பாணைக்கவ்விக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தது..
சிலநேரம் தனது எலிக்குஞ்சுக்கு உணவூட்டுவதற்காக இருக்குமோ? என நினைத்துக்கொண்டே சென்றார் காயா………..
........
வைகாசி 2012