கொஞ்சம் கொஞ்சமாய் காதல் சாரல் - பகுதி 17
சுஜியும் இது இப்படி முடியும் என்று எதிர்பார்க்கவில்லை. உண்மையில் அவள் கத்தியை கொண்டு வந்து அட்லஸிடம் தந்து என்னை கொன்று விடு என்றுச் சொல்ல தான் நினைத்திருந்தாள். அதற்காய் தான், கிச்சன் சென்று கத்தி எடுத்தாள். அதற்குள் எல்லாம் இப்படி தலை கீழாய் ஆகி விட்டது.
குத்துப் பட்ட இடத்திலிருந்து ரத்தம் பொல பொலவென வெளியேற, கிச்சன் எங்கும் ரத்தமானது. அவளுக்கு பி.போசடிவ் ரத்தம். தண்ணீராய் வழிந்தோடியது. அட்லஸ் கைகள், உடல் மற்றும் அவன் அணிந்திருந்த பேண்ட் உட்பட ரத்தம்.
என்ன செய்வதென்று அவனுக்கு புரியவில்லை. சற்று முன் கோபத் கனலாய் இருந்த அட்லஸ் இப்போது எங்கே என்று தெரியவில்லை. முழுதும் குழந்தையாய் மாறியிருந்தான். கைகளில் ஏந்தியிருந்த சுஜியை பார்த்து,
அட்லஸ்: பாப்பா, பாப்பா, பாப்பா....இங்க பாருடி! பாருடி பாப்பா! ஐயோ, கண்ணை திறந்து என்ன பாருடி! என்னடி இதெல்லாம்? ஐயோ உனக்கு ஏதாச்சம் ஆச்சுன்னா நான் என்னடி பண்ணுவேன்?
சுஜிக்கு கண்கள் லேசாக மங்க ஆரம்பித்து சொருக தொடங்கின. மயக்கத்தில் உளறுவது போல் இருந்தது அவள் பேசுவது.
சுஜி: சிரி ஷெரிப். பிளீஸ். நான்... திடிர்னு செத்துட்டா?!
அட்லஸ்: என்னடி, பாப்பா நீ? நான்தான் கிறுக்கன். நீயேண்டி இப்படி? ஒரு நிமிஷம் பொறுத்துக்கோ பாப்பா ஹோஸ்பிட்டல் போய்டலாம்.
அவளை அங்கேயே தரையில் படுக்க வைத்து விட்டு ஓடி போய் தன் அறையிலிருந்து ஒரு டி-ஷர்டை எடுத்து மாட்டிக் கொண்டு. அவளிடம் திரும்ப ஓடி வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தவளை அவன் கைகளில் ஏந்திக் கொண்டு சுவற்றில் மாட்டி வைத்திருந்த கார் சாவியையும் வீட்டுச் சாவியையும் கைகளில் பற்றி, முன் வாசல் கதவை மட்டும் பூட்டிடாமல் ஒருக்களித்து விட்டு அவளை தூக்கி கொண்டு லிப்டில் கார் பார்க்கிற்கு ஓடினான்.
சுஜியை அவன் பக்கத்துக்கு சீட்டாய் சாய்த்து அதில் படுக்க வைத்தான். அவன் கைகளில் எல்லாம் ரத்தம். கண்களில் எல்லாம் கண்ணீர். காரை வேகமாக அந்த கார் பார்க்கில் இருந்து ட்ரிவ் அடித்து வெளியாக்கினான்.
சுஜியின் உயிர் அவனுக்கு அவ்வளவு முக்கியம். அவன் உயிர் அல்லவா அவள். அடுக்குமாடியின் வாசலை கடக்கும் முன் காவலாளியிடம் வீட்டின் சாவியை கொடுத்து வீட்டை பூட்டி விடுமாறு சொல்லி சென்றான்.
அட்லஸ்: கொஞ்சம் நேரம் பொறுத்துக்கோ பாப்பா. ஆஸ்ப்பிட்டல் போய்டலாம். கொஞ்சம் பொறுத்துக்கோடி பாப்பா.
நண்பன் ரோஷனுக்கு கால் செய்தான். விசயத்தை சொல்லி தான் நேராய் அவனை நோக்கி வருவதையும் சொல்லி வைத்தான். நண்பன் ரோஷன், அட்லசோடு ஒரே ஊரில் பிறந்து வளர்ந்தவன். மலேசியாவிற்கு வேலை நிமித்தம் வந்து இங்கையே பெண் ஒருத்தியை பிடித்து போய் அவளை திருமணம் செய்து இங்கேயே தங்கி விட்டான்.
அவன் ஒரு தனியார் மருத்துவமனை வைத்திருக்கின்றான். அவன் மனைவியும் மருத்துவர் தான். அந்த மருத்துவமனை இருபத்தி நான்கு மணி நேரமும் சேவையில் இருக்கும். அது தெரிந்தே இப்போது அட்லஸ், சுஜியை அங்கு கூட்டிச் செல்கிறான்.
நல்ல வேளையாக, ரோஷன் அங்குதான் இருக்கிறான். ஏறக்குறைய இருபது நிமிடங்கள் பிடிக்கும் அங்கு செல்ல. கார் சாலையில் காற்றாய் பறந்தது. திரும்பி திரும்பி சுஜியை பார்த்துக் கொண்டான் அட்லஸ்.
அவளின் வயிற்றில் சொருகியிருந்த அந்த எட்டு இன்ச் கத்தி சுஜியின் ரத்தத்தை காவு வாங்கும் அருவா போல் கருணையற்று பார பட்ச்சம் இன்றி குடித்துக் கொண்டு இருந்தது. காரின் சீட் எல்லாம் கூட ரத்தத்தால் நனைந்து போனது.
அரை மயக்கத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சுஜி, அட்லஸை அவளின் தோய்ந்த கண்களால் லேசாகா பார்த்தாள்.
அட்லஸ்: பாப்பா.. ஒன்னு இல்லடி. உனக்கு ஒன்னும் இல்லடி. பக்கம் வந்துட்டோம் பாப்பா. இன்னும் ஐஞ்சி நிமிஷம் பொறுத்துக்கோ பாப்பா.
சுஜிக்கு மூச்சு இழுத்தது, இருட்டிய கண்ணில் ஒன்றும் தெரியவில்லை. காதில் அட்லஸ் பேசுவது விளங்கியது. மயக்கத்தோடு வலி, வேதை இதனை தாண்டி அவனின் வார்த்தைகள் அவளின் கண்களின் ஓரத்தில் கண்ணீரை வரவழைத்தது.
சுஜி, அட்லஸை பார்த்தாள் சிரித்தவாறு.
சுஜி: காதல்.. உம்மேல..
அட்லஸ்: பாப்பா, பேசாதடி. வேணாம், வேணா. ஓடிறலாம், கொஞ்சம் தூரம் தான்.
சுஜி: காதல்... உண்மை... உம்மேல.. நம்பு ஷெரிப்...
சொன்னவள், அவளின் வயிற்றில் சொருகியிருந்த கத்தியை கைகளில் பிடித்து இன்னும் ஆழமாக வயிற்றுக்குள் அழுத்தினாள்.
தொடரும்...