கொஞ்சம் கொஞ்சமாய் காதல் சாரல் - பகுதி 18

சுஜி கத்தியை இன்னும் ஆழமாக அவளின் வயிற்றில் அழுத்தியதை கண்ட அட்லஸ் அதிர்ச்சியோடு அலறினான்.

அட்லஸ்: பாப்பா !! என்னடி பண்ற நீ ? ஐயோ ! கடவுளே ! ஏண்டி என்ன இப்படி சித்ரவாதை பண்றே !

அவன் கண்களில் வழிந்த கண்ணீரை டி-ஷர்டில் துடைத்து விட்டு சுஜியின் கையை இறுக பற்றிக் கொண்டு,

அட்லஸ்: பாப்பா... பாப்பா இங்க பாருடி ! இங்க பாருடி சுஜி ! ஐ லவ் யூ டி! நான் இனி கோப பட மாட்டேன். சத்தியமா சுஜி ! சாத்தியமா ! நம்ப காதல் மேல சத்தியம்டி ! என் உலகமே நீதாண்டி சுஜி ! நின்றும் டி நீ இல்லாம என் உலகம் ! பிளீஸ் டி பாப்பா ! புரிஞ்சிக்கோடி சுஜி ! கயல் தீரா இல்லாம ஷெரிப் இல்லடி ! புரிஞ்சிகோடி பாப்பா ! ஐ லவ் யூ டி

சுஜி, அட்லஸின் கையை இன்னும் அழுத்தமாக இறுக்கினாள். வலியும் வேதனையும் அவளை வாட்டி எடுத்தது. பாடாய் பட்டவள், கண்கள் மூடி விட்டாள். ஆனால், உயிர் மூச்சை இழுத்துக் கொண்டு அப்போதும் அவளின் ரத்தக் கைகளால் அட்லஸின் முகத்தில் விரல்களால் அவனின் கண்கள், உதட்டையெல்லாம் தொட்டு தடவி பேசினால் கஷ்டப்பட்டு,

சுஜி: கொஞ்சி பேசிட... வேணாம்.. உன் கண்ணே பேசுது.. டா. ஷெரிப் சிரிடா.. உன் சிரிப்பு, கண்ணு பார்த்துக்கிட்டே போய்டறேன்...

அட்லஸ்: ஏண்டி இப்படிலாம் பேசற ? ஏண்டி செத்துருவேன்னு சொல்றே? என்னே விட்டு போயிராதடி பாப்பா ! ஐயோ ! ஐயோ ! எல்லாம் என்னாலதான் ! நான் மட்டும் பிரச்சனை பண்ணாம இருந்திருந்தா ! என் சுஜி, நீ இப்படி கஷ்டப்பட மாட்டியே !

சுஜி: லவ் யூ ஷெரி..

முழுதாய் மயங்கினாள் சுஜி.

அட்லசும் அதற்குள் மருத்துவமனையை அடைந்து விட்டான். ரோஷன் அவனுக்காகவே முன் வாசலிலேயே காத்திருந்தான். காரை நுழைவாயிலேயே நிறுத்தி விட்டு சுஜியை தூக்கி கொண்டு, ரோஷன் ஏற்பாடு செய்திருந்த ஸ்ட்ரெச்சரில் சுஜியை படுக்க வைத்து வேகமாக ஆபரேஷன் தியேட்டர்கு கொண்டுச் சென்றனர்.

ரோஷனின் மனைவி அமுதா, சுஜியை ஆபிரேஷன் தியேட்டரின் ஸ்ட்ரெச்சரில் கிடத்தி அவளின் காயத்தின் ஆழத்தை பார்த்தாள். வெளியில் வந்த அமுதா,

அமுதா: நர்ஸ், get me the consent form.

ரோஷன்: consent form அவசியமா?

அமுதா: நிச்சயம் ஆபிரேஷன் செய்யணும். காயம் ரொம்பவே ஆழமா இருக்கு. உறுதியா சொல்ல முடியாது, நிறைய ரத்தம் போயிருக்கு. எதுவானாலும் நடக்கலாம். அதுக்கு தான்....

அமுதா சொல்லி முடிக்கும் முன்னே,

ரோஷன்: சரி, நீ போய் ஆகா வேண்டியதை பாரு. நான் ஷெரிப் கிட்ட பேசிட்டு வரேன். அதை குடு.

ரோஷன், ஆபிரேஷன் தியேட்டர் வெளியில் குட்டி போட்ட பூனையாக அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்த அட்லஸை நோக்கி வந்தான்.

ரோஷன்: மச்சான், இதுல சைன் போடணும்டா. கொஞ்சம் ரிஸ்க். அதான்.

அட்லஸ்: முட்டாள் ! முட்டாள் ! நான் தாண்ட மச்சான் முட்டாள் ! அவளுக்கு ஏதும் ஆகக் கூடாதுடா ! நான் செத்துருவேண்டா மச்சான். நான் செத்துருவேன் ! எங்க போடணும் சொல்லு சைன், போடறேன். அவளை மட்டும் காப்பாத்தி கொடுத்திரு மச்சான். பிளீஸ்!

ரோஷன், அட்லஸை ஆச்சரியமாக பார்த்தான். தற்போதைக்கு எந்த விவரமும் கேட்க கூடாது என்ற இங்கீதம் அவனுக்கு நன்றாகவே தெரியும். அதனால், எல்லாம் நல்லபடியாக முடிந்த பிறகு கேட்டுக் கொள்ளலாம் என்றெண்ணி பேசாமல் இருந்து விட்டான். நல்லபடியாக முடிய வேண்டும் என்று கடவுளை பிராத்தனை செய்தான்.

அட்லஸ் ஒப்புதல் படிவத்தில் கையெழுத்திட்டு ரோஷனிடம் நீட்டினான்.

நிமலன் போட வேண்டிய கையெழுத்தை அன்று அங்கு அப்போது அட்லசாகிய, ஷெரிப் சுஜியின் கணவனின் ஸ்தானத்தில் இருந்து போட்டான், ஷெரிஃவாகவே.

அட்லஸ் அப்போது நினைக்கவில்லை அந்த ஒற்றை கையெழுத்து அவன் வாழ்க்கையை முழுதாய் புரட்டி போட போகிறது என்று.

ரத்தம் படிந்த ஆடையோடும் முகத்தோடும் ஈயாடாமல் அமர்ந்திருந்தான் அட்லஸ் அந்த ஆபிரேசன் தியேட்டர் முன் இருந்த இருக்கையில்.

ரோஷன் இருக் கைகளில் காப்பி கப்புகளை ஏந்திக் கொண்டு வந்தான். ஷெரிஃவிடம் ஒன்றை நீட்டினான். அவன் அதை வாங்கவில்லை.

ரோஷன்: குடிடா மச்சான். கொஞ்சம் ஓகே வா இருக்கும்.

அட்லஸ் நண்பனின் கையிலிருந்து காப்பியை வாங்கி இரண்டு முடக்கு வைத்தான்.

ரோஷன்: மச்சான், நேரா போய் லெப்ட்ல திரும்பினா வாஸ்ரூம். போய் மூஞ்சிலாம் கழுவிவிட்டு வா. என் ரூம்க்கு போலாம். என்கிட்ட டிரஸ் இருக்கு. மாத்திக்கோ சரியா ?

அட்லஸ், திரும்பி ரோஷனை பார்த்தான். அட்லஸின் கண்கள் கலங்கியிருந்தது.

ரோஷன்: என்னடா ?

அட்லஸ்: Thank you மச்சான். நீயும் உன் wife வும் இல்லனா..

ரோஷன்: டேய், விடுடா மச்சான். முதல்ல ஆபிரேஷன் நல்லபடியா முடியட்டும் சரியா.

அட்லஸ்: நீ எதுமே கேட்கலையே மச்சான்...

ரோஷன்: அந்த பொண்ண பத்தி தானே ? டேய், நீ கதறும் போதே தெரிஞ்சிருச்சிடா மச்சான். அந்த பொண்ணு உனக்கு எவ்வளவு முக்கியம்னு. இப்போ சொல்லு, ஏன் கத்தி குத்து ?

அட்லஸ்: பைத்தியம்டா அவளுக்கு, என் மேல. அவ்ளோ பைத்தியம். நான்தான் மடத்தனமான அவள காயப்படுத்திட்டேன். தப்பா பேசிட்டேன் மச்சான். அவ காதல சந்தேகப்பட்டுட்டேன். கோவம் டா அவளுக்கு அதான்..

ரோஷன்: சரி விடு, மச்சான். அதான், ஆபிரேஷன் போய்கிட்டு இருக்கே. கவலபடாத மச்சான். எல்லாம் சரி ஆயிடும்.

அட்லஸின் தோள்களை தட்டிக் கொடுத்தான் ரோஷன். சுவற்றில் மாட்டி இருந்த கடிகாரம் மணி அடித்தது.

விடியற்காலை மூன்று.

தொடரும்....

எழுதியவர் : தீப்சந்தினி (8-Oct-19, 2:08 pm)
சேர்த்தது : தீப்சந்தினி
பார்வை : 197

மேலே