நாத் பரம்பரை

டேய் ராமநாதா இங்க வாடா.
@@@@@
என்ன அக்கா?
@@@@@@
நீ உம் பேரை மாத்திட்டயாமே அது உண்மையா?
@@@@@
ஆமாம் அக்கா. கால மாற்றத்துக்கு ஏத்த மாதிரி பேரை மாத்திக்கிறதுதான் நாகரீகம். எம் பேரு இனிமே ராமநாதன் இல்லை. 'ராம்நாத்'. என்னோட வாரிசுகள் பேரும் 'நாத்'னுதான் முடியும். இனி என் ரத்தின் ரத்தங்கள் எல்லாம் 'நாத்' பரம்பரையைச் சேர்ந்தவங்க.
@@@@@
சரி உம் பசங்க ரண்டு பேரும் என்ன 'நாத்'துடா. நெல்லு நாத்தா, கம்பு நாத்தா, தக்காளி நாத்தா.
@@@@@
அய்யா அக்கா. கிண்டல் பண்ணாத. இந்த ' 'நாத்' இந்தி 'நாத்'.
@@@@@
சரி உம் பசங்க பேரை எப்பிடி மாத்தின?
@@@@@@
மூத்த பையன் 'தங்கராஜன்', இனி 'தங்ராஜ்'.
இரண்டாவது பையன் 'நாகராஜன்' இனி 'நாக்ராஜ்'
@@@@@@
பேரப்பிள்ளைங்க பேருங்களச் சொல்லுடா.
@@@@@
மேகநாதன் இனிமே 'மேக்நாத்'. லோகநாதன் இனிமே 'லோக்நாத்'..
@@@@@@@
அட நாத்துப் பசங்களா. இந்த நாத்தையெல்லாம் புடுங்கி குண்டும் குழியுமா, சேரும் சகதியுமா இருக்கிற தெருவில தான் நடணும்
■■■■■■■■■■■■■■■■◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆■■■■■■■■■◆◆◆◆◆◆◆◆◆◆
சிரிக்க அல்ல. சிந்திக்க. தமிழுணர்வை வளர்க்க.

எழுதியவர் : மலர். (10-Oct-19, 10:29 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 85

மேலே