கொஞ்சம் கொஞ்சமாய் காதல் சாரல் - பகுதி 19

சுஜியின் ஆபிரேஷன் முடிந்து அவளை தனி அறைக்கு மாற்றுவதற்கு மணி காலை எட்டுக்கு மேல் ஆகி விட்டது.

மயக்கத்திலேயே இருந்தால் சுஜி. எப்படியும் கண் விழிப்பதற்கு ஏறக்குறைய இரண்டு மணி நேரம் ஆகும் என ஏற்கனவே ரோஷன் சொல்லியிருந்தான். கட்டிலின் பக்கத்திலேயே தலை சாய்த்து படுத்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் அட்லஸ்.

சற்று முன் கண்டதையும் ஆரவாரமாக சிந்தித்துக் கொண்டிருந்த அவனது மூளை தற்போது அமைதியாகவும் களைப்பாகவும் இருந்தது. சுஜியின் கட்டிலிலேயே தலை சாய்த்து இருந்தவனுக்கு கண்கள் சொருகியது. இருந்தும் தடாலென எழுந்து வீடிற்கு கிளம்பினான்.

ஆம், ரோஷன் சொன்னது போல் சுஜி விழிக்க எப்படியும் இரண்டு மணி நேரம் ஆகும். அதற்குள் வீட்டிற்கு சென்று குளித்து அவனின் power bank இங்கேயே கொண்டு வந்து விடலாம் என்று எண்ணியே மருத்துவமனையிலிருந்து கிளம்பினான்.

அதுவும் இது ரோஷனின் தனியார் மருத்துவமனை சுஜிக்கு இங்கு ஒரு குறையும் வராது என்பதையும் அவன் நன்றாகவே அறிவான்.

ஹோட்டல் அறையில் சுஜியை காணாமல் பதறி போன நிமலன் போனை எடுத்து பார்த்ததன் மூலம் அவள் எமியுடன் வெளியில் சென்று இருக்கிறாள் என்பதை அறிந்துக் கொண்டான்.

சுஜியின் போனுக்கு அழைத்து கிடைக்காததால் எமியின் போனுக்கு பலமுறை அழைத்தான். எமியோ, என்ன சொல்வதென்று தெரியாமல் அவனின் காலை எடுக்காமலேயே இருந்தாள். எமி, சுஜிக்கும் அட்லசுக்கும் மாறி மாறி அழைத்து இருவரும் போனை எடுக்காமல் போகவே எமிக்கு தலையே சுற்றியது.

அட்லஸ் வீட்டினுள் நுழைந்து அவனின் போனை charger சொருகினான். அப்படியே வீட்டை சுத்தம் செய்யும் பணிப்பெண்ணையும் அழைத்து இன்று வர வேண்டாம் நாளை வர சொல்லி போனை வைத்தான். அப்போது சுஜியின் கைத்தொலைபேசியிலன் அலறல் சத்தம் திடீரென்று அவனின் படுக்கை அறையிலிருந்து கேட்டது.

வேகமாக அவனின் அறைக்குச் சென்றான். நிமலன் முப்பத்தி ஏழு தடவை கால் செய்திருந்தான். இதில் வாட்ஸ் ஆப் மற்றும் மெசேஜ் என்றும் எல்லாவகையிலும் அவளை தொடர்பு கொள்ள முயற்சித்திருக்கிறான். இதில் எமி வேறு பதினெட்டு முறை அழைத்திருந்தாள்.

இப்போதுதான் அட்லசுக்கு ஞாபகம் வந்தது எமி ஏற்கனவே அவன் மருத்துவமனையில் இருக்கும் போதே அவனுக்கு நிறைய தடவை கால் செய்து கொண்டே இருந்தாள் என்பது. அவன் யோசிக்கும் போதே எமி மீண்டும் அழைத்தாள். அட்லஸ் பேசினான்.

அட்லஸ்: சொல்லு எமி..

எமி அவள் காதில் இருந்த போனை மீண்டும் எடுத்து ஒரு முறை இது சுஜியின் எண் தான என்பதனை சரி பார்த்துக் கொண்டாள். ஆம், திடிரென்று ஒரு ஆண் குரல் அதுவும் தன் தோழியின் கைபேசியில் கேட்பது என்றால் சாதாரன விசயமா என்ன.

எமி: ஹலோ..

அட்லஸ்: சொல்லு எமி..அட்லஸ் பேசறேன்

எமி: அட்லஸ், உன்கிட்ட எப்படி சுஜியோட போன்? சுஜி எங்க?

அட்லஸ்: நீ எங்க இருக்க எமி?

எமி: டேய், முதல்ல சுஜி எங்கன்னு சொல்லு?

அட்லஸ்: சுஜி, சுஜி....

எமி: அட்லஸ்... சுஜி எங்க?

அட்லஸ்: ரோஷனோடே ஹாஸ்பிட்டல்ல இருக்கா. கத்தி வயித்துல குத்திர்ச்சி. எதார்த்தமா...

எமி பெருமூச்சு ஒன்றை விட்டாள். பின், தொடர்ந்தாள்.

எமி: ஹ்ம்ம்.... சரி வாட் நம்பர் அனுப்பு. எனக்கு கொஞ்சம் வெளியிலே வேலை இருக்கு. அது முடிச்சிட்டு வந்து பாக்கறேன்.

அட்லஸ்: சோரி எமி, நான்...

எமி: It's Ok அட்லஸ். விடு, விடு. இதப்பத்தி நாம அப்பறம் பேசலாம். இப்போ நிமலனுக்கு என்ன பதில்? ஓயாம கால் பண்ணிக்கிட்டே இருக்கறான். என்ன சொல்ல?

தொடரும்....

எழுதியவர் : தீப்சந்தினி (11-Oct-19, 1:18 pm)
சேர்த்தது : நிர்மலன்
பார்வை : 206

மேலே