உணராமை

இறைவன் படைப்பில் அனைத்து உயிரினங்களுக்கும்
ஒரு தனி சிறப்பு உண்டு அல்லவோ..............!
அறிய வேண்டியதை அறியாதிருத்தல் அறியாமை அல்லவோ......!
உன்னை உணராமை; உன்னில் இருக்கும் தனித்திறனை-
அறியாமல் இருப்பது முயலாமை அல்லவோ..........!
இயன்றதை அறியாமல் இருப்பது -வாழ்வின் இயலாமை அல்லவோ......!

உனக்குத் தேவையான அனைத்தும்
இவ்வுலகத்தில் படைக்கப்பட்டு உள்ளது;
அதை அறிந்து நெகிழாமை -உணராமை அல்லவோ.........!
அனைவராலும் அனைத்தையும் அறிய இயல்வதில்லை-
ஆனால் எதையும் அறியாமல் இருப்பது வாழ்வின்மை அல்லவோ......!

நன்னெறி நூல்கள் எத்தனை இருந்தாலும் கல்லாமை - பேதமை அல்லவோ.....!
கற்ற கல்வியை வாழ்வில் பயன்படுத்தாமை - முயலாமை அல்லவோ.....!

துன்பம் வரும் காரணத்தை உணராமை அறியாமை அல்லவோ...!
துன்பம் அனைவரின் வாழ்விலும் இருகாரணங்களால் வரும்
ஒன்று ‘அறியாமை’ -இறைவன் நமக்கு அறியாதவற்றை அறியவைக்கும் அனுபவ பாட பயிற்சி அல்லவோ....!
மற்றோன்று ‘தவறு’ -நாம் செய்த தவற்றின் பிரதிபலிப்பால் வரும் துன்பம் அல்லவோ....!
வேர் கண்டு நீர் ஊற்றினால்
வீர் கொண்டு விருட்சமாவாய்
உணராவாழ்க்கை உயிர் இருந்தும் கற்சிலை போல் அல்லவோ....!
உணர்ந்து வாழ்ந்தால் உயர்வுண்டு அல்லவோ.....!

--கவி கயல்

எழுதியவர் : கயல் (3-Jan-19, 3:35 pm)
சேர்த்தது : கயல்
பார்வை : 320

மேலே