கானல் நீராய் போன வாழ்க்கை…
அம்மாவின் ஸ்பரிசம் தொட்டு எழுந்த காலங்கள் கடந்தன..
இன்று அலரத்தின் எரிச்சல் சத்தம் கேட்டு எழுந்த நாட்கள் கசந்து போயின..
அறத்தூக்கத்தில் ஆறரை மணி ஓட்டம், பேருந்துக்கு...
அரை மணி நேர ஜன்னல் பயணம்….
அலுத்து போகாத ஐந்து பாடல்கள் Playlist யில்….
அரை வயிற்றில் அரைகுறையை ஏழரை மணி டிப்பன்…
சூழ்நிலையின் சுயநலத்துகாக ஓடி ஓடி செய்யும் Corporate வேலை…
பார்வையிலே பாதி எரித்து விடும் மேலாதிகாரி…
நுனிநாக்கில் Noodles பிழியும் ஆங்கிலம்…
சிரிப்பே வரவில்லை என்றாலும் சிரிக்க வேண்டும் Colleagues யின் மொக்கை காமெடிகளுக்கு…
ரெண்டு Punch ஒரு Lunch.. Appraisal யின் ஆதிக்கம்…
ஒன்னாந்தேதி சம்பளம்… வரவுக்கு முன் வரிசையில் நிற்கும் செலவு..
மாத EMI..
மளிகை பாக்கி..
மாமா வீட்டு விசேஷம்..
மனசு சரியில்லன்னு ஊர் சுத்திக்காட்ட சொல்லும் அம்மாவின் ஆசை...
அப்பப்போ எட்டி பார்க்கும் ஆசைகள்.. அலுத்துக் கொள்ளாமல் அழகாய் விட்டுக் கொடுக்கும் நான்,
எப்போ கல்யாணம்??? என்ற உறவினர்களின் கேள்விகளுக்கு வெட்கம் என்ற பெயரில் பொய்யான சிரிப்பு மட்டுமே பதிலாய்…
அதி வேகமாக சூழழும் கடிகாரம்.. Again and again அதே பம்பர வேலை…
அரசல் புரசலாக ஆறு எழு நண்பர்கள்… ஆப்பிள் ஜீஸ்க்கு சன்டை போடும் தங்கை..
இது எல்லாத்துக்கும் நடுவுல இஞ்சிமரப்பா போல ஒருக் காதல்..
இவண் இனிப்பா.,கசப்பா.,காரமா.,உப்பா,என்னானே புரியாத புதிராய் ஒரு காதலன்..
அத்தி பூ பூத்தாற் அவன் சிரிப்பு..
இன்னிக்காச்சு எனக்காக Phone பன்ன மாட்டானானு ஒரு எதிர்பார்ப்பு..
தவனை முறையில் அவனின் உரையாடல் , அதிலும் அழகாய் சதி செய்யும் airtel network.
இவண் நல்லவனா.? கேட்டவனா.? ராமனா.? கிருஷ்ண்ணா? எப்பவும் ஒரு Vibration..
ஆசைகளை ஆசை பட கூட அனுமதிக்காத அவனுடைய Commitments..
செல்ல சன்டை என்ற பெயரில் செழிப்பாய் தினம் தினம் சன்டை..
அவன் மேல் உண்டான என் காதல் Icecream மாதிரி Taste பன்னாலும் கரையுது.,Waste பன்னாலும் கரையுது..
காத்திருக்க சொல்லும் காதலனின் முகம் பார்ப்பதா.? இல்லை., கை காட்டுபனுக்கு கழுத்தை நீட்ட சொல்லும் தந்தையின் சொல் கேட்பதா.??????
வாழ்த்துகள் Whatsappல் மட்டும்.. Feeling happy என்ற Status Facebookல் மட்டும்..
ராகு கேது Round கட்டும்...குருப்பெயர்ச்சி கும்மி அடிக்கும்..எழாரை Helicopterல வரும்...என்னவோ நமக்கு மட்டும் .
இடி விழுந்தாலும் Easya எடுத்துக்கர இந்த இயந்திர வாழ்க்கை எதை கத்து கொடுத்ததோ இல்லையோ...
ஆசைகளை கட்டுப்படுத்த புத்தனாக பிறக்க தேவையில்லை,.நடுத்தர குடும்பத்தில் முதல் பெண்ணாக பிறந்தாலே போதுமானது என்பதை நாசுக்காக கற்றுக் கொடுத்து விட்டது..