மார்கழி மாதம்
மரகத கற்களால் பதிக்கப்பட்ட
பாய்கள் விரிக்கப்பட்டதுபோல்
பசுமை புல்வெளி, அதன்மேல்
வந்தமர்ந்த மந்திர வெண்முத்துக்களால்
வேய்ந்த இரத்தின கம்பளமோ வென
மார்கழி மாத வெண்பனி துளிகள்
புல்வெளி இடையில் அமைந்ததோர்
சிறு கண்ணன் திருக்கோவில் , அதி காலை வேளை
திருக்கதவுகள் இன்னும் தாழ் திறக்கவில்லை
வெளியே ஒரு சிறு இளம் கன்னியர்கள் கூட்டம்
அதன் நடுவே திருப்பாவைப் பாடிய
புனித மங்கை ஆண்டாள் போல வேடம்போட்ட
ஓர் கன்னி, இவர்கள் ஒன்றுகூடி அழகான இனிய
குரல் ஒன்று சேர உளம் உருக பாடி அழைத்தனர்
கண்ணபெருமானை; மார்கழி திங்களில் நோன்பு
மேற்கொண்ட எங்களுக்கு உன் தரிசனம் தந்து
'எமக்கு பறைதர மாட்டாயோ மாயவனே என்று
பாட, அங்கு சோலைக்குயில் ஒன்று இப்பாட்டுக்கு
மெட்டு சேர்த்து இசைப்பதுபோல் கூவ ,
கோவிலின் உள்ளே உறையும் கற்சிலையாய்
காட்சிதரும் கண்ணன் யோக நித்திரையை விட்டு
எழுததுபோல் கோவில் கதவுகள் திறக்க
உற்சவக் கண்ணன் பல்லக்கில் காட்சிதந்தான்
பனிமுத்து போர்த்திய மரகதப் புல்வெளியின் மேலே
விண்ணில் காணமுடியா பவித்திரனை மண்ணிலேயே
தூய மார்கழி மாதத்தில் கண்ட மகிழ்ச்சி
அவனை நோம்பிருந்து நாடி சென்ற கன்னியருக்கு
மாதங்களில் மார்கழி அல்லவா .................
இயற்கை அள்ளித்தரும் பேரெழிலில் குளிர்
காற்றும் வீச கண்ணனைக்கான பள்ளி தோறும்
தெய்வீகத்த திருவுலா ...............