எதுவுமேயில்லாமல் எதுவுமேயில்லை

எதுவுமேயில்லாமல் எதுவுமேயில்லை.................
மலருக்கு மணம் உண்டு!
மயிலுக்கு தோகை உண்டு!
குயிலுக்கு குரல் உண்டு!
கனிக்கு சுவை உண்டு!
கடலுக்கு அலை உண்டு!
வெண்ணிலவுக்கு வானம் உண்டு!
வண்ணத்துப்பூச்சிக்கு வர்ணங்கள் உண்டு!

எதுவுமேயில்லாமல் எதுவுமேயில்லை...................
இருட்டுக்கு வெளிச்சம் உண்டு!
காலத்திற்கு சுழற்சி உண்டு!
கவிதைக்கு கற்பனை உண்டு!
மனிதனுக்கு மனம் உண்டு!
மனோபலம் இருந்தால் மார்க்கம் உண்டு!
உனக்குள்ளும் ஏதோ ஒன்று உண்டு! அதை
உணர்ந்தால் வாழ்வு உண்டு......!!!
--கவி கயல்

எழுதியவர் : கயல் (22-Mar-19, 8:47 pm)
சேர்த்தது : கயல்
பார்வை : 120

மேலே