இயற்கையைக் காப்போம்

பச்சைவண்ண மேலாடை வறட்சியின் வறுமையால்
கொறஞ்சதும் கவனிக்காம செல்லுற பார்வைகள்
நாகரிகம் எனச்சொல்லி கட்டுந்துணி வறுமையானால்
மொய்ப்பது மாறணும் இயற்கையைப் பாக்கணும்...

காதலன் கண்ணெதுக்க வந்ததும் கன்னிமொகம்
எப்படி இருக்குமுணு ஆண்டவன் படைச்சிருக்கான்
கெழக்குச் செவந்ததும் கண்முழிக்கும் தாமரை
அதற்கோர் சாட்சியாம் அழகானக் காட்சியாம்...

மலையெல்லாம் செல்வமோ?... கொட்டிக் கெடக்க
அலைபோல அருவியெல்லாம் சிரிச்சு மயக்க
எவன்கண்ணு பட்டதோ?... எமனா?... வந்துடுறான்
அதையழிக்க அவனுக்குத் துணையா நம்மாளுதான்...

முன்னோர் மரத்த நட்டுவச்சுச் செத்துப்போக
பின்னோர் அதவெட்டி தன்வயித்த நெரப்புறான்
வேத்துக் கொட்டயிலே வேதனையைத் தீக்குற
தென்றல் எங்கிருந்து வருதோ?... யோசிக்கமாட்டான்...

வெள்ளாம நெலத்துலயே வளர்ச்சியின் பெயரால்
சாலைகள் போடுவார் தொழிற்சாலைகள் அமைப்பார்
வாழுற இடத்துல சாகுற கோலத்தையே
தருவார் இது மாறுவது மாற்றுவது எப்போ?...

இருப்பதைக் காத்திடுவோம் இல்லாததை நட்டிடுவோம்
வறண்ட நெலத்தில் விழுகிற மழைத்துளியாய்
பொறந்த பூமிக்கு வளத்தைச் சேர்த்திடுவோம்
ஏனென்றால் இயற்கையாலே துடிக்கிறது நம் இதயங்கள்...

எழுதியவர் : இதயம் விஜய் (22-Mar-19, 5:12 pm)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 472

மேலே