மகளிர்க்கு பொற்காலம்

இம்மண்ணில் வாழ் மக்களுக்கு
அள்ளி அள்ளி பெருந்தனம்
தந்திடுவாள் அன்னை மகா லட்சுமி
என்றறிந்து , அன்னையவள்
குடிகொண்ட கோயில் அனைத்தும்
எங்கிருந்தாலும் தேடி தேடி போகின்றாய்
எத்தனையோ அர்ச்சனைகள், வேள்விகள்
அத்தனையும் செய்ய தயங்காத
மனிதர் அழகான பெண்ணைக் கண்டால்
அவள் பரிமளப்பில் இலக்குமியைக்
காணாது வெறும் போகமே காண்பதேனோ
கோயிலில் , கற்சிலையில் இலக்குமியைக்
காணும் மனிதர் உயிர்ச்சிலையாய்
உலவிவரும் மகளிரில் அட்ட இலக்குமியைக்
கண்டுகொண்டால் காம வெறி அவனை
தானே விட்டு ஓடும் போகமும் மோகமும்
சேர்ந்தே ஓடிவிட மனிதன் தூயவனாகிவிடுவான்
அக்காலம் எக்காலமென்று காத்திருப்போம்
அக்காலமே மகளிர்க்கு இவ்வுலகில் பொற்காலம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (22-Mar-19, 2:33 pm)
பார்வை : 52

மேலே