கனவும் நினைவும்
நினைவெல்லாம் நீரே நின்றால்,
நான் என்னை மறந்தே போகிறேன் !
நிழல் போல உந்தன் பின்னால்,
நிதம் நானே தொடர்கிறேன் !
நீர் என்னை பார்க்க தானே,
என் விழிகள் துடிகிறதே !
உம் குரலை கேட்க தானே,
கண்திறந்தே தொலைகிறேன் !
என்னை என்று அழைப்பீரோ,
எதிர்பார்த்தே தவிக்கின்றேன் !
என் கரத்தை பிடிப்பீரோ,
என்னை முழுதும் தருகின்றேன் !
உம் நினைவே கவியாய் பொழிகிறது,
உணர்வோடு உறவாய் மாறி,
உடன் இன்றே அழைப்பாயா !