இன்றே நன்று

காலக் கறையான் அரிப்புக்குக்
கோவில் சிலையும்
விதிவிலக்கல்ல..

கும்பிடும் சிலையும்
கைவிடப்படுகிறது
ஊனம் உடலில் வந்துவிட்டால்,
கருவறைப் பாதுகாப்பிலிருந்து
வெளியேற்றப்பட்டு
கடும் வெயில்
காற்றுமழைப் பாதிப்பிலும்
காக்கைக் குருவி எச்ச
அவமதிப்பிலும் அவதிப்படுகிது..

கற்றுக்கொள் மனிதா
நிரந்தரமல்ல எதுவும்,
நடப்பு வாழ்வில்
கிடைப்பதை வைத்து
நன்றாய்ச் செய்,
அதுவும்
இன்றே செய்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (1-Jul-19, 5:22 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : indrey nandru
பார்வை : 142

மேலே