தனிமையில் அவள்

அழகாய்ப்பூத்திருந்த குண்டுமல்லி
அப்படியே அழகில் இரவெல்லாம் மிளிர்ந்தது
அவன் வரவிற்கு காத்திருந்தாள் அவளும்
அழகின் உருவாய் குண்டுமல்லியாய் -இரவும்
போனது குண்டுமல்லி சுருங்கி அழகும் போய்
செடியில் வாடி இருந்தது அவன் வாராது போக
குண்டுமல்லியாய் பகலில் வாடி மெலிந்தாள் அவளும்
தனிமை வாட்ட தவித்த மனத்தளாய்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (1-Jul-19, 5:32 pm)
Tanglish : thanimayil aval
பார்வை : 307

சிறந்த கவிதைகள்

மேலே