வறுமையோட போயிட்டியே என் ஆத்தா

மருத்துவம் பார்ப்பேன்னு
மனசார நா சொன்னேன்
மனசையும், மண்குடிசையும் பார்த்து
தெகச்சு நின்ன என் ஆத்தா

உனக்காக சேர்ப்பேன்னு
வயலுக்கு நீ போன
முழு வைராக்கியதோட பாதி செருப்போட
கால்காசோட திரும்பி வந்த என் ஆத்தா

கால்காசும் காணலியே
சேத்தகாசும் நிலைக்கலியே
காசோட அப்பன் போன தெசபார்த்து
கலங்கி நின்ன என் ஆத்தா

தடம்மாறி போன அப்பன்
தடுமாறி வீடு வந்தான்
தட்டிவிட்டான் ஓட்ட பாத்திரத்த
மிஞ்சியத நீ திங்கையில என் ஆத்தா

ஓட்ட பாத்திரமும் ஒழுகுற குடிசையும்
வெச்சும் கணக்கு காணல
காணாதத கழுத்துல கண்டாங் கடங்காரன்
குறுகி நின்ன என் ஆத்தா

கஷ்டத்த நீ மாத்துன்னு
கெஞ்சி பாத்த கடவுள பார்த்து
புலப்படல, வழி தேடலாம் வான்னு
கூட்டிக்கிட்டான் உன்னையும் அவன்கூட

உம்மகனும் முன்னேறியாச்சு
மண்குடிச மாளிகையாச்சு
அப்பன்கூட மாறியாச்சு
ஆத்தா உங்கனவெல்லாம் நெனவாச்சு

வந்திரு என்னோடனு நா சொன்னேன்
அர்த்தத்தோட சிரிச்சே என் கனவுல
கண்முழிச்சேன் விளங்கிடுச்சு
கடவுளா நீ இருந்ததுலதான் வரம் தந்தேன்னு!!

எழுதியவர் : (5-Feb-15, 10:35 am)
பார்வை : 87

மேலே