வானம் கிழித்த மின்னல்

என் மனமெனும் வானத்தில்
மதி உன்னை
மறைத்து வைத்தேன்.
மனமில்லையா உனக்கு?
வானம் கிழித்த
மின்னல் போல- என்
மனம் கிழித்தது ஏனோ?
மணப்பதற்கு மறைத்த உன்னை,
மதியில்லாமல் - என்
விதி முடித்தாய்
மாண்டு போன என்னுயிர்
மறுபடியும் முளைக்குமா?
மறு பிறப்பெடுத்தேனும் உன்னை
மணக்க போய்வருகிறேன் காதலியே!!!

எழுதியவர் : கவிக்கண்ணன் (8-Feb-15, 9:47 pm)
பார்வை : 90

மேலே