ஆதலினால் காதல் செய்வீர் - மண் பயனுற வேண்டும் கவிதைப்போட்டி

குமரிக்கண்டத்தில் மாந்தன் மொழிந்த மொழி
அம்மா என்று உதடு முதலில் ஒலித்த மொழி
அயல்நாட்டவரை அா்ப்பணிக்க வைத்த மொழி
திராவிட மொழிக்கெல்லாம் மூல மொழி முக்கால மொழி!

காதல் என்ற பெயாில் காமம் இங்கில்லை
காதலிப்போாின் சேமமே இங்குண்டு !

காதல் என்ற பெயாில் ஏமாற்றம் இங்கில்லை.
காதலிப்போாின் வாழ்வின் மாற்றமே இங்குண்டு!

காதல் என்ற பெயாில் தற்கொலை இங்கில்லை.
காதலிப்போாின் நற்கலையே இங்குண்டு!

இத்தனையும் பெற்றிருக்கும் மொழியே
அத்தனைபேரும் கற்றிருக்கும் நம் செந்தமிழ் மொழி !

நாம் காதலிக்க முயன்றால்
எழுத்தை ஆளும் எழுத்தாளா் பதவி கொடுக்கும்!

நாம் காதலிக்க பயின்றால்
தலையெழுத்தை மாற்றி உதவியே வளர்க்கும்!

தமிழை காதலித்தவன்
நிச்சயம் அன்னையையும் காதலிப்பான்.
இம்மண்ணையும் காதலிப்பான்!

ஆதலினால் காதல் செய்வீா்
செந்தமிழை நாளும் நாளும்!
------------------------------------------------------------------------------------------

இக்கவிதை எனது சொந்த படைப்பு என உறுதியளிக்கிறேன்.

எழுதியவர் : சபியுல்லாஹ் (8-Feb-15, 9:32 pm)
பார்வை : 103

மேலே